• May 06 2024

யாழில் தந்தை செல்வாவின் 47 வது நினைவேந்தல் நிகழ்வும் நினைவுப் பேருரையும்...!

Sharmi / Apr 26th 2024, 10:43 am
image

Advertisement

தந்தை செல்வாவின் 47 வது நினைவேந்தல் நிகழ்வும் நினைவுப் பேருரையும் இன்றையதினம் காலை யாழ். தந்தை செல்வா நினைவிட வளாகத்தில் இடம்பெற்றது.

தந்தை செல்வா நினைவு அறங்காவற் குழுவின் தலைவர் ஓய்வுநிலை ஆயர் கலாநிதி சு.ஜெபநேசன் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

ஆரம்ப நிகழ்வாக தந்தை செல்வாவின் சிலைக்கு மலர் மாலை அணிவித்ததுடன் அன்னாரின் சமாதிக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து நினைவுப் பேருரையினை யாழ் பல்கலைக்கழக அரசியல் விஞ்ஞானதுறை பேராசிரியர் கே.ரி. கணேசலிங்கம்  இலங்கை தமிழ் தேசிய இனத்தின் விடுதலைக்கான வாய்ப்பு களும், சவால்களும் என்னும் கருப்பொருளில் உரையாற்றினர்.

இவ் நிகழ்வில், தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், முன்னாள்  யாழ் மாநகர முதல்வர் இமானுவேல் ஆனோல்ட், தந்தை செல்வா நினைவு அறக்காவற் குழுவின் உபதலைவர் குலநாயகம், தமிழரசுக்கட்சியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சோ.மாவை சேனாதிராஜா, வடமாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.சிவஞானம்,பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.



யாழில் தந்தை செல்வாவின் 47 வது நினைவேந்தல் நிகழ்வும் நினைவுப் பேருரையும். தந்தை செல்வாவின் 47 வது நினைவேந்தல் நிகழ்வும் நினைவுப் பேருரையும் இன்றையதினம் காலை யாழ். தந்தை செல்வா நினைவிட வளாகத்தில் இடம்பெற்றது.தந்தை செல்வா நினைவு அறங்காவற் குழுவின் தலைவர் ஓய்வுநிலை ஆயர் கலாநிதி சு.ஜெபநேசன் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.ஆரம்ப நிகழ்வாக தந்தை செல்வாவின் சிலைக்கு மலர் மாலை அணிவித்ததுடன் அன்னாரின் சமாதிக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.அதனைத் தொடர்ந்து நினைவுப் பேருரையினை யாழ் பல்கலைக்கழக அரசியல் விஞ்ஞானதுறை பேராசிரியர் கே.ரி. கணேசலிங்கம்  இலங்கை தமிழ் தேசிய இனத்தின் விடுதலைக்கான வாய்ப்பு களும், சவால்களும் என்னும் கருப்பொருளில் உரையாற்றினர்.இவ் நிகழ்வில், தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், முன்னாள்  யாழ் மாநகர முதல்வர் இமானுவேல் ஆனோல்ட், தந்தை செல்வா நினைவு அறக்காவற் குழுவின் உபதலைவர் குலநாயகம், தமிழரசுக்கட்சியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சோ.மாவை சேனாதிராஜா, வடமாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.சிவஞானம்,பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement