• May 18 2024

நடிகர் ராமராஜன் வீட்டில் நடந்த திடீர் சோகம்.. திரையுலகினருக்கு அதிர்ச்சி தகவல்

Aathira / May 4th 2024, 7:19 pm
image

Advertisement

80 மற்றும் 90 ஆம் ஆண்டுகளில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்தவர் தான் ராமராஜன். இவர் ஆரம்பத்தில் உதவி இயக்குனராக இருந்து அதன் பின் நம்ம ஊரு நல்ல ஊரு என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக மாறினார்.

இதை தொடர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்த இவருக்கு கரகாட்டக்காரன் என்ற படம் தான் திருப்பு முனையை ஏற்படுத்தி இருந்தது.

கங்கை அமரன் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் கனகாவின் நடிப்பு மற்றும் வாழைப்பழ காமெடி என்பவை இன்றும் ரசிகர்களால் ரசிக்கப்பட்ட காமெடியாக காணப்படுகின்றது.

இதைத் தொடர்ந்து நடிகை நளினியை காதலித்து திருமணம் செய்த ராமராஜனுக்கு அருணா, அருண் என்ற இரு குழந்தைகள் உள்ளார்கள். எனினும் அவர்கள் இருவரும் 2001 ஆம் ஆண்டு கருத்து வேறுபாட்டின் காரணமாக பிரிந்து தற்போது தனித்தனியாக வாழ்ந்து வருகிறார்கள்.


கடந்த காலத்தில் கொடி கட்டிப்பறந்த ராமராஜனுக்கு பட வாய்ப்புகள் சரியாக கிடைக்காததால் தற்போது 12 வருட நீண்ட இடைவெளிக்குப் பிறகு சாமானியன் என்ற படத்தில் நடித்து வருகின்றார். இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில், நடிகர் ராமராஜனின் உடன்பிறந்த மூத்த சகோதரி இன்று மாலை உயிரிழந்துள்ளார். அவரது மறைவிற்கு பலரும் தமது இரங்கலை தெரிவித்து வருகின்றார்கள்.


75 வயதான ராமராஜனின் சகோதரி உயிரிழந்த செய்தியை கேட்டதும் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக தற்போது மேலூர் சென்று கொண்டுள்ளாராம் ராமராஜன். இவரது உடல் நாளை நல்லடக்கம் செய்யப்பட உள்ள நிலையில், ராமராஜனுக்கு பலரும் ஆறுதல் கூறி வருகின்றார்கள்.

நடிகர் ராமராஜன் வீட்டில் நடந்த திடீர் சோகம். திரையுலகினருக்கு அதிர்ச்சி தகவல் 80 மற்றும் 90 ஆம் ஆண்டுகளில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்தவர் தான் ராமராஜன். இவர் ஆரம்பத்தில் உதவி இயக்குனராக இருந்து அதன் பின் நம்ம ஊரு நல்ல ஊரு என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக மாறினார்.இதை தொடர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்த இவருக்கு கரகாட்டக்காரன் என்ற படம் தான் திருப்பு முனையை ஏற்படுத்தி இருந்தது.கங்கை அமரன் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் கனகாவின் நடிப்பு மற்றும் வாழைப்பழ காமெடி என்பவை இன்றும் ரசிகர்களால் ரசிக்கப்பட்ட காமெடியாக காணப்படுகின்றது.இதைத் தொடர்ந்து நடிகை நளினியை காதலித்து திருமணம் செய்த ராமராஜனுக்கு அருணா, அருண் என்ற இரு குழந்தைகள் உள்ளார்கள். எனினும் அவர்கள் இருவரும் 2001 ஆம் ஆண்டு கருத்து வேறுபாட்டின் காரணமாக பிரிந்து தற்போது தனித்தனியாக வாழ்ந்து வருகிறார்கள்.கடந்த காலத்தில் கொடி கட்டிப்பறந்த ராமராஜனுக்கு பட வாய்ப்புகள் சரியாக கிடைக்காததால் தற்போது 12 வருட நீண்ட இடைவெளிக்குப் பிறகு சாமானியன் என்ற படத்தில் நடித்து வருகின்றார். இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது.இந்த நிலையில், நடிகர் ராமராஜனின் உடன்பிறந்த மூத்த சகோதரி இன்று மாலை உயிரிழந்துள்ளார். அவரது மறைவிற்கு பலரும் தமது இரங்கலை தெரிவித்து வருகின்றார்கள்.75 வயதான ராமராஜனின் சகோதரி உயிரிழந்த செய்தியை கேட்டதும் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக தற்போது மேலூர் சென்று கொண்டுள்ளாராம் ராமராஜன். இவரது உடல் நாளை நல்லடக்கம் செய்யப்பட உள்ள நிலையில், ராமராஜனுக்கு பலரும் ஆறுதல் கூறி வருகின்றார்கள்.

Advertisement

Advertisement

Advertisement