• May 06 2024

மேதின ஊர்வலத்திற்கு 1000 இளைஞர்களை அழைத்துவர அரசு திட்டம்? சபையில் எம்.பி பரபரப்புத் தகவல்

Chithra / Apr 26th 2024, 11:45 am
image

Advertisement


மே மாதம் முதலாம் திகதி நடைபெறவுள்ள மேதின ஊர்வலத்தில் பங்கு பற்றுவதற்காக, இளைஞர் படையணியில் இருந்து ஆயிரம் பேரை கொழும்பிற்கு  அழைத்து வர அரசாங்கம் முயற்சித்துள்ளதாக ஜக்கிய மக்கள் சக்தி இன்று நாடாளுமன்றத்தில் குற்றம் சுமத்தியுள்ளது.

இன்று காலை இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரண இது தொடர்பாக கேள்வி எழுப்பியிருந்தார்.

மே முதலாம் திகதி கொழும்பிற்கு ஆயிரம் இளைஞர்களை அழைத்துவர அரசாங்கம் தயாராகி வருகின்றது.

இதற்கான செலவுகளை பெறுப்பேற்பது யார் ? அரசாங்கத்திலுள்ள எந்த கட்சி இந்த நடவடிக்கையை முன்னெடுக்கின்றது என்பதை தெரியப்படுத்த வேண்டும்.

தொழிற்ச்சங்கள் என்றால் எமக்கு பிரச்சனை அல்ல. ஆனால் அரசாங்கம் இளைஞர் படையணியில்  இருந்தே இளைஞர்களை கொண்டு வர எத்தணிக்கின்றது.

இன்று மாலைக்குள் அரசாங்கம் இதற்கு உரிய பதிலை வழங்கவேண்டும்  என அவர் தெரிவித்துள்ளார்.

மேதின ஊர்வலத்திற்கு 1000 இளைஞர்களை அழைத்துவர அரசு திட்டம் சபையில் எம்.பி பரபரப்புத் தகவல் மே மாதம் முதலாம் திகதி நடைபெறவுள்ள மேதின ஊர்வலத்தில் பங்கு பற்றுவதற்காக, இளைஞர் படையணியில் இருந்து ஆயிரம் பேரை கொழும்பிற்கு  அழைத்து வர அரசாங்கம் முயற்சித்துள்ளதாக ஜக்கிய மக்கள் சக்தி இன்று நாடாளுமன்றத்தில் குற்றம் சுமத்தியுள்ளது.இன்று காலை இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரண இது தொடர்பாக கேள்வி எழுப்பியிருந்தார்.மே முதலாம் திகதி கொழும்பிற்கு ஆயிரம் இளைஞர்களை அழைத்துவர அரசாங்கம் தயாராகி வருகின்றது.இதற்கான செலவுகளை பெறுப்பேற்பது யார் அரசாங்கத்திலுள்ள எந்த கட்சி இந்த நடவடிக்கையை முன்னெடுக்கின்றது என்பதை தெரியப்படுத்த வேண்டும்.தொழிற்ச்சங்கள் என்றால் எமக்கு பிரச்சனை அல்ல. ஆனால் அரசாங்கம் இளைஞர் படையணியில்  இருந்தே இளைஞர்களை கொண்டு வர எத்தணிக்கின்றது.இன்று மாலைக்குள் அரசாங்கம் இதற்கு உரிய பதிலை வழங்கவேண்டும்  என அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement