• May 06 2024

ஆபாச புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பதிவேற்றுபவர்களை அடையாளம் காண விசேட நடவடிக்கை!

Chithra / Apr 26th 2024, 8:38 am
image

Advertisement


  

18 வயதிற்கு குறைந்த ஆண் மற்றும் பெண் பிள்ளைகளின் ஆபாச புகைப்படங்கள் மற்றும் காணொளிக் காட்சிகளை சமூக ஊடகங்கள் அல்லது இணையத்தளங்களில் பதிவேற்றுபவர்களை அடையாளம் காண்பதற்காக காவல்துறை விசேட நடவடிக்கை ஒன்றை முன்னெடுத்துள்ளது.

இந்த வருடத்தின் முதல் மூன்று மாதங்களில் சிறார்களுடன் தொடர்புடைய புகைப்படங்களை வெளியிட்ட 10 சம்பங்கள் பதிவாகியுள்ளன.

இதன்படி, கூகுள் மற்றும் ஏனைய நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கைதானவர்கள் 20 வயதிற்கும் குறைவானவர்கள் என்றும் 10 வயதிற்கும் குறைவான பாடசாலை செல்லும் மாணவிகளின் ஆபாச புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை இணையத்தளங்களில் தரவேற்றியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


ஆபாச புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பதிவேற்றுபவர்களை அடையாளம் காண விசேட நடவடிக்கை   18 வயதிற்கு குறைந்த ஆண் மற்றும் பெண் பிள்ளைகளின் ஆபாச புகைப்படங்கள் மற்றும் காணொளிக் காட்சிகளை சமூக ஊடகங்கள் அல்லது இணையத்தளங்களில் பதிவேற்றுபவர்களை அடையாளம் காண்பதற்காக காவல்துறை விசேட நடவடிக்கை ஒன்றை முன்னெடுத்துள்ளது.இந்த வருடத்தின் முதல் மூன்று மாதங்களில் சிறார்களுடன் தொடர்புடைய புகைப்படங்களை வெளியிட்ட 10 சம்பங்கள் பதிவாகியுள்ளன.இதன்படி, கூகுள் மற்றும் ஏனைய நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.கைதானவர்கள் 20 வயதிற்கும் குறைவானவர்கள் என்றும் 10 வயதிற்கும் குறைவான பாடசாலை செல்லும் மாணவிகளின் ஆபாச புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை இணையத்தளங்களில் தரவேற்றியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement