• Nov 26 2024

தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறார் மஹிந்த ராஜபக்ஷ..!

Chithra / Jun 19th 2024, 1:00 pm
image

  

பொதுஜன பெரமுனவின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தீவிர அரசியலில் இருந்து விடைபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி, அவர் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடாமல் இருக்க தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உடல்நிலை மற்றும் அரசியலில் ஈடுபடுவதற்காக நாடு முழுவதும் பயணம் செய்வதால் ஏற்படும் அசௌகரியங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த முடிவை எடுத்துள்ளார் என்றும் அறியமுடிகின்றது.

எவ்வாறாயினும், எதிர்வரும் தேர்தலில் பொதுஜன பெரமுனவின் வெற்றிக்காக அவர் தொடர்ந்து பாடுபடுவார் என அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன. 

வழக்கறிஞரரான மகிந்த 1970 இல் முதன்முதலாக நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகி 2005 ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறும் வரை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.

ஜனாதிபதியாக தனது முதலாவது ஆறாண்டு காலப் பதவியை 2005 நவம்பர் 19 இல் தொடங்கினார். இரண்டாவது தடவையாக 2010 ஜனவரி 27 இல் தெரிவானார். 

மூன்றாவது தடவையாக 2015 தேர்தலில் போட்டியிட்டு மைத்திரிபால சிறிசேனவிடம் தோற்று 2015 ஜனவரி 9 இல் பதவியில் இருந்து விலகினார்.

தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறார் மஹிந்த ராஜபக்ஷ.   பொதுஜன பெரமுனவின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தீவிர அரசியலில் இருந்து விடைபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.அதன்படி, அவர் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடாமல் இருக்க தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.உடல்நிலை மற்றும் அரசியலில் ஈடுபடுவதற்காக நாடு முழுவதும் பயணம் செய்வதால் ஏற்படும் அசௌகரியங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த முடிவை எடுத்துள்ளார் என்றும் அறியமுடிகின்றது.எவ்வாறாயினும், எதிர்வரும் தேர்தலில் பொதுஜன பெரமுனவின் வெற்றிக்காக அவர் தொடர்ந்து பாடுபடுவார் என அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன. வழக்கறிஞரரான மகிந்த 1970 இல் முதன்முதலாக நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகி 2005 ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறும் வரை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.ஜனாதிபதியாக தனது முதலாவது ஆறாண்டு காலப் பதவியை 2005 நவம்பர் 19 இல் தொடங்கினார். இரண்டாவது தடவையாக 2010 ஜனவரி 27 இல் தெரிவானார். மூன்றாவது தடவையாக 2015 தேர்தலில் போட்டியிட்டு மைத்திரிபால சிறிசேனவிடம் தோற்று 2015 ஜனவரி 9 இல் பதவியில் இருந்து விலகினார்.

Advertisement

Advertisement

Advertisement