• Nov 28 2024

22 மில்லியன் மக்களின் வரிப்பணத்தை வீணடித்த மகிந்த..! சாணக்கியன் பகிரங்க குற்றச்சாட்டு

Chithra / Dec 1st 2023, 2:37 pm
image

 

மகிந்த ராஜபக்ஷவினர் தமது மாவட்டத்தில் வெல்ல வேண்டும் என்பதற்காக 22 மில்லியன் மக்களின் வரிப்பணத்தினையும் வீணடித்து பல்வேறு அபிவிருத்திகளை அம்பாந்தோட்டையில் செய்துள்ளனர் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

மகிந்த ராஜபக்ஷவினுடைய ஆட்சிக் காலத்தில் தேசிய கொள்கை இல்லாமையின் காரணமாக அம்பாந்தோட்டையில் அமைக்கப்பட்ட விமான நிலையம், அதிவேக நெடுஞ்சாலை, அதிவேக புகையிரத போக்குவரத்து என்பன அம்பாந்தோட்டையில் அமைக்கப்பட்டமையினால் இலங்கையின் ஏனைய பகுதிகளுக்கு முறையான போக்குவரத்து வசதிகள் அமைக்கப்படவில்லை.

குருணாகல் மாவட்டத்தில் நாமல் ராஜபக்க்ஷ தேர்தலில் போட்டியிட்ட போதும் குருணாகல் மாவட்டத்தில் ஒரு அதிவேக நெடுஞ்சாலையினைக் கூட அமைக்கவில்லை.

தற்போது புகையிரத சேவைகளுக்கு மாத்திரமே பயண உத்தரவுச் சீட்டு (Warrant) வழங்கப்படுகின்றது. அதனை பேரூந்து சேவைகளுக்கும் மிக விரைவில் ஏற்படுத்தி தர வேண்டும். 

மேலும் பாதுகாப்பற்ற புகையிரத கடவைககள் புனரமைக்கப்பட்டு அதில் பணி புரியும் ஊழியர்களை நிரந்தர ஊழியர்களாக மாற்றுதல் வேண்டும். 

அத்துடன் இங்கு பணிபுரிந்து ஓய்வடைந்தவர்களுக்கும் உரிய நேரத்தில் ஓய்வூதியம் வழங்கப்படல் வேண்டும் இவ்வாறு சாணக்கியன் தெரிவித்துள்ளார்.


22 மில்லியன் மக்களின் வரிப்பணத்தை வீணடித்த மகிந்த. சாணக்கியன் பகிரங்க குற்றச்சாட்டு  மகிந்த ராஜபக்ஷவினர் தமது மாவட்டத்தில் வெல்ல வேண்டும் என்பதற்காக 22 மில்லியன் மக்களின் வரிப்பணத்தினையும் வீணடித்து பல்வேறு அபிவிருத்திகளை அம்பாந்தோட்டையில் செய்துள்ளனர் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மகிந்த ராஜபக்ஷவினுடைய ஆட்சிக் காலத்தில் தேசிய கொள்கை இல்லாமையின் காரணமாக அம்பாந்தோட்டையில் அமைக்கப்பட்ட விமான நிலையம், அதிவேக நெடுஞ்சாலை, அதிவேக புகையிரத போக்குவரத்து என்பன அம்பாந்தோட்டையில் அமைக்கப்பட்டமையினால் இலங்கையின் ஏனைய பகுதிகளுக்கு முறையான போக்குவரத்து வசதிகள் அமைக்கப்படவில்லை.குருணாகல் மாவட்டத்தில் நாமல் ராஜபக்க்ஷ தேர்தலில் போட்டியிட்ட போதும் குருணாகல் மாவட்டத்தில் ஒரு அதிவேக நெடுஞ்சாலையினைக் கூட அமைக்கவில்லை.தற்போது புகையிரத சேவைகளுக்கு மாத்திரமே பயண உத்தரவுச் சீட்டு (Warrant) வழங்கப்படுகின்றது. அதனை பேரூந்து சேவைகளுக்கும் மிக விரைவில் ஏற்படுத்தி தர வேண்டும். மேலும் பாதுகாப்பற்ற புகையிரத கடவைககள் புனரமைக்கப்பட்டு அதில் பணி புரியும் ஊழியர்களை நிரந்தர ஊழியர்களாக மாற்றுதல் வேண்டும். அத்துடன் இங்கு பணிபுரிந்து ஓய்வடைந்தவர்களுக்கும் உரிய நேரத்தில் ஓய்வூதியம் வழங்கப்படல் வேண்டும் இவ்வாறு சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement