விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே, சிறைச்சாலை அதிகாரிகளால் கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு இன்று அழைத்து வரப்பட்டுள்ளார்.
கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் தரமற்ற கரிம உரத்தை இறக்குமதி செய்தமை தொடர்பிலான வழக்கு விசாரணைகள் இன்று (26) இடம்பெறவுள்ள நிலையிலேயே, அவர் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அவருக்கு நீதிமன்றம் பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளது.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழு மற்றும் பிரதிவாதிகள் தரப்பு வழக்கறிஞர்கள் முன்வைத்த வாதங்களை பரிசீலித்த பின்னர் கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
பிணையில் விடுதலையானார் மஹிந்தானந்த விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே, சிறைச்சாலை அதிகாரிகளால் கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு இன்று அழைத்து வரப்பட்டுள்ளார்.கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் தரமற்ற கரிம உரத்தை இறக்குமதி செய்தமை தொடர்பிலான வழக்கு விசாரணைகள் இன்று (26) இடம்பெறவுள்ள நிலையிலேயே, அவர் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.இந்நிலையில் அவருக்கு நீதிமன்றம் பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளது.இலஞ்ச ஊழல் ஆணைக்குழு மற்றும் பிரதிவாதிகள் தரப்பு வழக்கறிஞர்கள் முன்வைத்த வாதங்களை பரிசீலித்த பின்னர் கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.