எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுன கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக தம்மிக்க பெரேரா களமிறங்குவார் என தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் முன்னாள் ரஷ்ய தூதுவர் உதயங்க வீரதுங்க முகநூல் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
திங்கட்கிழமை நடைபெறவுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிறைவேற்று சபைக் கூட்டத்தில், பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக தம்மிக்க பெரேரா களமிறங்குவார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, முன்னாள் ரஷ்ய தூதுவர் உதயங்க வீரதுங்க, ஊடகவியலாளர் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்து, நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேராவை நியமிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர், முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ நேரடியாக தீர்மானம் எடுத்துள்ளதாக தெரிவித்தார்.
தம்மிக்க பெரேரா தொடர்பில் மஹிந்த தரப்பின் தீர்மானம். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுன கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக தம்மிக்க பெரேரா களமிறங்குவார் என தெரிவிக்கப்படுகிறது.இது தொடர்பில் முன்னாள் ரஷ்ய தூதுவர் உதயங்க வீரதுங்க முகநூல் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.திங்கட்கிழமை நடைபெறவுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிறைவேற்று சபைக் கூட்டத்தில், பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக தம்மிக்க பெரேரா களமிறங்குவார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.இதன்படி, முன்னாள் ரஷ்ய தூதுவர் உதயங்க வீரதுங்க, ஊடகவியலாளர் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்து, நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேராவை நியமிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர், முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ நேரடியாக தீர்மானம் எடுத்துள்ளதாக தெரிவித்தார்.