• May 17 2026

தன்னை சந்திக்க தான் மக்களை அழைத்து வருவதில்லை - மஹிந்தவுக்கு மைத்திரி பதிலடி

Chithra / Sep 16th 2025, 11:20 am
image


தன்னை சந்திக்க தான் மக்களை அழைத்து வருவதில்லை என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது கார்ல்டன் இல்லத்துக்கு சென்ற போது அவரைப் பார்க்க கூடியிருந்த பெரும் கூட்டத்தைப் பற்றிக் குறிப்பிட்டபோதே, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார். 

மஹிந்த ராஜபக்ஷவைச் சுற்றி ஒரு பெரிய கூட்டம் கூடுகிறது. எனினும் உங்களைப் பார்க்க யாரும் வரவில்லையா? என்று செய்தியாளர் ஒருவர் வினவியுள்ளார். 

இதன்போதே, தான் மக்களை அழைத்து வருவதில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். 

இதேவேளை 2024 ஆம் ஆண்டு தமது தனிப்பட்ட செலவுகளுக்காக ஒரு கோடி ரூபாவை செலவிட்டதாக கூறப்படும் புள்ளிவிபரங்கள் முற்றிலும் தவறானவை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் உள்ள மற்றுமொரு வீட்டுக்கு தாம் இடம்பெயரவுள்ளதாகவும் தெரிவித்தார்.

தற்போது, முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரது வீடுகளும் மூடப்பட்டுள்ளன.

அவற்றை வன விலங்குகள் ஆக்கிரமித்துள்ளன.

இந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட வீட்டில் இருந்து வெளியேறுவதில் தனக்கு எந்தவிதமான கவலையும் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.

தன்னை சந்திக்க தான் மக்களை அழைத்து வருவதில்லை - மஹிந்தவுக்கு மைத்திரி பதிலடி தன்னை சந்திக்க தான் மக்களை அழைத்து வருவதில்லை என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது கார்ல்டன் இல்லத்துக்கு சென்ற போது அவரைப் பார்க்க கூடியிருந்த பெரும் கூட்டத்தைப் பற்றிக் குறிப்பிட்டபோதே, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார். மஹிந்த ராஜபக்ஷவைச் சுற்றி ஒரு பெரிய கூட்டம் கூடுகிறது. எனினும் உங்களைப் பார்க்க யாரும் வரவில்லையா என்று செய்தியாளர் ஒருவர் வினவியுள்ளார். இதன்போதே, தான் மக்களை அழைத்து வருவதில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை 2024 ஆம் ஆண்டு தமது தனிப்பட்ட செலவுகளுக்காக ஒரு கோடி ரூபாவை செலவிட்டதாக கூறப்படும் புள்ளிவிபரங்கள் முற்றிலும் தவறானவை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.கொழும்பில் உள்ள மற்றுமொரு வீட்டுக்கு தாம் இடம்பெயரவுள்ளதாகவும் தெரிவித்தார்.தற்போது, முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரது வீடுகளும் மூடப்பட்டுள்ளன.அவற்றை வன விலங்குகள் ஆக்கிரமித்துள்ளன.இந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட வீட்டில் இருந்து வெளியேறுவதில் தனக்கு எந்தவிதமான கவலையும் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement