• Jul 22 2025

வெளிநாட்டில் வாகனம் மோதியதில் பணிப்பெண் உயிரிழப்பு!

shanuja / Jul 19th 2025, 7:15 pm
image

சைப்ரஸ் நாட்டில் பணியாற்றிவந்த இலங்கைப் பெண் ஒருவர்,  நேற்று (18) காலை வீதி விபத்தில்  சிக்கி உயிரிழந்துள்ளதாக அந்த நாட்டு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.


இலங்கையைச் சேர்ந்த தயாவதி என்ற 58 வயது பெண் ஒருவர்  பணிப்பெண்ணாக பணிபுரிய சைப்ரஸ் நாட்டிற்குச் சென்றுள்ளார். 


அங்கு ஒரு வீட்டில் அவர் பணிப்பெண்ணாக பணியாற்றிவந்த  நிலையில் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது. 


சைப்ரஸின் லிமாசோல் பகுதியில் குறித்த இலங்கைப் பெண் வீதியைக் கடக்க முயன்றபோது வாகனம் ஒன்று அவரை மோதித் தள்ளியதில்  உயிரிழந்தார்.


விபத்தை ஏற்படுத்திய வாகன சாரதி சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடியநிலையில்  அவரைக் கைது செய்வதற்கு தேடுதல் பணிகளில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். 


18 வயதுடைய குறித்த சந்தேகநபருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் சந்தேக நபரின் புகைப்படத்தை  வெளியிட்டு தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 


அண்மைக்காலமாக பணிக்காக பல பொறுப்புக்களை சுமந்து வெளிநாடுகளுக்குச் சென்றுள்ள இலங்கையர்கள் பலர் விபத்தில் சிக்கியும் பல வன்முறைகளில் சிக்கியும் உயிரிழந்து வருகின்றமை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வெளிநாட்டில் வாகனம் மோதியதில் பணிப்பெண் உயிரிழப்பு சைப்ரஸ் நாட்டில் பணியாற்றிவந்த இலங்கைப் பெண் ஒருவர்,  நேற்று (18) காலை வீதி விபத்தில்  சிக்கி உயிரிழந்துள்ளதாக அந்த நாட்டு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.இலங்கையைச் சேர்ந்த தயாவதி என்ற 58 வயது பெண் ஒருவர்  பணிப்பெண்ணாக பணிபுரிய சைப்ரஸ் நாட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு ஒரு வீட்டில் அவர் பணிப்பெண்ணாக பணியாற்றிவந்த  நிலையில் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது. சைப்ரஸின் லிமாசோல் பகுதியில் குறித்த இலங்கைப் பெண் வீதியைக் கடக்க முயன்றபோது வாகனம் ஒன்று அவரை மோதித் தள்ளியதில்  உயிரிழந்தார்.விபத்தை ஏற்படுத்திய வாகன சாரதி சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடியநிலையில்  அவரைக் கைது செய்வதற்கு தேடுதல் பணிகளில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். 18 வயதுடைய குறித்த சந்தேகநபருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் சந்தேக நபரின் புகைப்படத்தை  வெளியிட்டு தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். அண்மைக்காலமாக பணிக்காக பல பொறுப்புக்களை சுமந்து வெளிநாடுகளுக்குச் சென்றுள்ள இலங்கையர்கள் பலர் விபத்தில் சிக்கியும் பல வன்முறைகளில் சிக்கியும் உயிரிழந்து வருகின்றமை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement