• Mar 09 2025

வெளிநாட்டுப் பயணங்களுக்காக பொது நிதியை தேவையற்ற முறையில் வீணாக்கவில்லை; மைத்திரி அறிக்கை..!

Sharmi / Mar 7th 2025, 8:58 am
image

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கடந்த 2015 முதல் 2019 வரை தனது ஜனாதிபதி பதவிக் காலத்தில் மேற்கொண்ட அனைத்து வெளிநாட்டுப் பயணங்களும், அரசுப் பயணங்கள் மற்றும் உத்தியோகபூர்வ விஜயங்கள் உட்பட, அந்த நாடுகளின் உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில் மேற்கொள்ளப்பட்டதாகவும், வெளிநாட்டுப் பயணங்களுக்காக பொது நிதியை தேவையற்ற முறையில் வீணாக்கவில்லை என்றும் ஒரு சிறப்பு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இந்தப் பயணங்கள் ஒருபோதும் தனது சொந்த மகிழ்ச்சிக்காக மேற்கொள்ளப்பட்ட பயணங்கள் அல்ல என்பதையும் முன்னாள் ஜனாதிபதி தனது அறிக்கையில் வலியுறுத்துகிறார்.

அந்த விஜயங்களின் போது தன்னுடன் வந்த அமைச்சர்கள்,  நாட்டிற்கு நன்மை பயக்கும் முன்னூறுக்கும் மேற்பட்ட ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டதாகவும், துரதிர்ஷ்டவசமாக, 2020 க்குப் பிறகு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் அந்த ஒப்பந்தங்களை செயல்படுத்தவில்லை எனவும்  தெரிவித்தார்.

அதேவேளை,  தான் ஆட்சிக்கு வந்தபோது, ​​ஐக்கிய நாடுகள் சபை, காமன்வெல்த் நாடுகள் மற்றும் உலகின் பிற சக்திவாய்ந்த நாடுகள் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளுடனான உறவுகள் முற்றிலுமாக முறிந்துவிட்டன.

அந்த உறவுகள் அனைத்தையும் மீட்டெடுக்கவும், வெளிநாட்டு உறவுகளை வலுப்படுத்தவும் நடவடிக்கை எடுத்திருந்தேன்.

தனது பதவிக் காலத்தில், மற்ற நாடுகளின் தலைவர்கள் ஒரு வெளிநாட்டு மாநாட்டில் கலந்து கொள்ளும்போது, ​​அவரைச் சந்தித்து நட்புரீதியான கலந்துரையாடல்களில் ஈடுபடும் அளவுக்கு வலுவான வெளிநாட்டு உறவுகளை ஏற்படுத்த முடிந்தது என்றும் அவர் தனது அறிக்கையில் வலியுறுத்தினார்.

வெளிநாட்டுப் பயணங்களுக்காக பொது நிதியை தேவையற்ற முறையில் வீணாக்கவில்லை; மைத்திரி அறிக்கை. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கடந்த 2015 முதல் 2019 வரை தனது ஜனாதிபதி பதவிக் காலத்தில் மேற்கொண்ட அனைத்து வெளிநாட்டுப் பயணங்களும், அரசுப் பயணங்கள் மற்றும் உத்தியோகபூர்வ விஜயங்கள் உட்பட, அந்த நாடுகளின் உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில் மேற்கொள்ளப்பட்டதாகவும், வெளிநாட்டுப் பயணங்களுக்காக பொது நிதியை தேவையற்ற முறையில் வீணாக்கவில்லை என்றும் ஒரு சிறப்பு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.இந்தப் பயணங்கள் ஒருபோதும் தனது சொந்த மகிழ்ச்சிக்காக மேற்கொள்ளப்பட்ட பயணங்கள் அல்ல என்பதையும் முன்னாள் ஜனாதிபதி தனது அறிக்கையில் வலியுறுத்துகிறார்.அந்த விஜயங்களின் போது தன்னுடன் வந்த அமைச்சர்கள்,  நாட்டிற்கு நன்மை பயக்கும் முன்னூறுக்கும் மேற்பட்ட ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டதாகவும், துரதிர்ஷ்டவசமாக, 2020 க்குப் பிறகு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் அந்த ஒப்பந்தங்களை செயல்படுத்தவில்லை எனவும்  தெரிவித்தார்.அதேவேளை,  தான் ஆட்சிக்கு வந்தபோது, ​​ஐக்கிய நாடுகள் சபை, காமன்வெல்த் நாடுகள் மற்றும் உலகின் பிற சக்திவாய்ந்த நாடுகள் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளுடனான உறவுகள் முற்றிலுமாக முறிந்துவிட்டன.அந்த உறவுகள் அனைத்தையும் மீட்டெடுக்கவும், வெளிநாட்டு உறவுகளை வலுப்படுத்தவும் நடவடிக்கை எடுத்திருந்தேன்.தனது பதவிக் காலத்தில், மற்ற நாடுகளின் தலைவர்கள் ஒரு வெளிநாட்டு மாநாட்டில் கலந்து கொள்ளும்போது, ​​அவரைச் சந்தித்து நட்புரீதியான கலந்துரையாடல்களில் ஈடுபடும் அளவுக்கு வலுவான வெளிநாட்டு உறவுகளை ஏற்படுத்த முடிந்தது என்றும் அவர் தனது அறிக்கையில் வலியுறுத்தினார்.

Advertisement

Advertisement

Advertisement