முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 7 வருட சிறைத்தண்டனை வழங்க முடியுமென பிவித்துரு ஹெல உருமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நடத்தப்பட்ட பயங்கரவாத சம்பவத்துடன் தொடர்புடைய உண்மையை மறைத்த குற்றச்சாட்டுக்காக இவ்வாறாக சட்டத்துக்கமைய அவர் கைது செய்யப்படலாமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் நேற்று (25) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே, உதய கம்மன்பில இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் தொடர்பான உண்மையை மறைத்த முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேனவை கைது செய்யுமாறு நாம் வலியுறுத்தினோம்.
எனினும், அவரது கருத்தை அடிப்படையாக கொண்டு கைது செய்ய முடியாதென காவல்துறையினார் தெரிவித்தனர்.
அத்துடன், நீதிமன்றில் அவர் முன்வைக்கும் கருத்தை அடிப்படையாக கொண்டு அடுத்த கட்ட சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தனர்.
காவல்துறையினரின் இந்த பொறுப்பற்ற பதிலை நான் எதிர்க்கிறேன். மைத்திரிபால சிறிசேன முன்வைத்த கருத்தின் அடிப்படையில் அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கலாம்.
அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியுமென்பதை காவல்துறையினர் இப்போதாவது தெரிந்து கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.
மைத்திரிக்கு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கடூழிய சிறை தண்டனை சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு கோரிக்கை முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 7 வருட சிறைத்தண்டனை வழங்க முடியுமென பிவித்துரு ஹெல உருமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.இலங்கையில் நடத்தப்பட்ட பயங்கரவாத சம்பவத்துடன் தொடர்புடைய உண்மையை மறைத்த குற்றச்சாட்டுக்காக இவ்வாறாக சட்டத்துக்கமைய அவர் கைது செய்யப்படலாமென அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் நேற்று (25) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே, உதய கம்மன்பில இதனை தெரிவித்துள்ளார்.இலங்கையில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் தொடர்பான உண்மையை மறைத்த முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேனவை கைது செய்யுமாறு நாம் வலியுறுத்தினோம்.எனினும், அவரது கருத்தை அடிப்படையாக கொண்டு கைது செய்ய முடியாதென காவல்துறையினார் தெரிவித்தனர்.அத்துடன், நீதிமன்றில் அவர் முன்வைக்கும் கருத்தை அடிப்படையாக கொண்டு அடுத்த கட்ட சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தனர்.காவல்துறையினரின் இந்த பொறுப்பற்ற பதிலை நான் எதிர்க்கிறேன். மைத்திரிபால சிறிசேன முன்வைத்த கருத்தின் அடிப்படையில் அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கலாம்.அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியுமென்பதை காவல்துறையினர் இப்போதாவது தெரிந்து கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.