• Sep 20 2024

பட்டினியால் வாடும் மக்களை வாழ வைப்பதற்கு கைகளிலே பணமுள்ள முதலாளிகள் சிந்திக்க வேண்டும்- மைத்திரிபால சிறிசேனா தெரிவிப்பு! samugammedia

Tamil nila / Jun 29th 2023, 6:33 pm
image

Advertisement

உலகத்தில் மூன்றில் ஒரு பங்கு வறுமையால் வாடும் நிலையில் கோடி்கணக்கான பணச் செலவில் ரைட்டான் கப்பலைக் கட்டுவதில் பயனில்லை. பட்டினியால் வாடும் மக்களை வாழ வைப்பதற்கு கைகளிலே பணமுள்ள முதலாளிகள் சிந்திக்க வேண்டும் என முன்னாள்  ஜனாதிபதியும்  ஹீலங்கா சுதந்திரக்  கட்சியின்  தலைவருமான மைத்திரிபால  சிறிசேனா தெரிவித்துள்ளார். 

இன்று 29) மாலை கோண்டாவிலில் புதிதாக அமைக்கப்பட்ட மக்கள் நலன்பேணும் அமைப்பின் கட்டடத் தொகுதித் திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரை ஆற்றும் போதே இதனை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், 

இந்த நாட்டிலும் வருமான வேறுபாட்டை இல்லாமல் செய்தால் தான் வறுமைக் கோட்டுக்குள் உள்ள மக்களைக் குறைக்க முடியும். நான் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் வேலை செய்யவில்லையென சில பேர் கூறுகின்றார்கள்.

நான் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் வட கிழக்கில் ஜனாதிபதி செயலணி உருவாக்கி கோடிக்கணக்கான பணம் மூலம் அபிவிருத்தியை மேற்கொண்டேன். இச் செயலணிக்கான பணம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினூடாகவே வழங்கப்பட்டது

யாழ் போதான வைத்தியசாலைக் கட்டடத்திற்கு சுகாதார அமைச்சராக இருந்த காலத்தில் அடிக்கல் நாட்டி ஜனாதிபதியாக இருந்த காலத்தில் திறந்து வைத்தேன். 

யுத்தத்தின் பின் பலாலி விமான நிலையம் தடைப்பட்டிருந்த நிலையில்  எனது காலத்தில் மீள புனரமைத்து இந்தியாவிற்கும் இலங்கைக்குமிடையிலான விமான மூல பயணத்திற்கு வழிவகுத்தேன்.

நீண்ட காலமாக இராணுவத்தால் அதியுயர் பாதுகாப்பு  வலயமாக காணப்பட்ட காணிகளில் 98% காணிகளை மக்கள் பாவனைக்காக விடுவித்ததுடன் மீள் குடியேறிய மக்களுக்கு இந்தியவின் உதவியுடன் வீடுகளைக் கட்டிக்கொடுக்கும் நடவடிக்கைகளையும் எடுத்தேன்

இதே வேளை எனது  காலத்தில் காங்கேசன்துறைப்  பகுதியில் கட்டப்பட்ட ஜனாதிபதி மாளிகையின் வேலைத்திட்டம் நிறைவுறாமல் இருந்தது.  அது முடிவுற்றிருந்தால் ரென்டர் மூலம் தனியாருக்கு வழங்கி வருமானமீட்ட நடவடிக்கை எடுத்திருப்பேன்.

எது எவ்வாறாயினும் சில ஊடகங்களும் ஊடகவியளாளர்களும் என்னை பொய்யான தகவல்களை பயன்படுத்தி எழுதுகிறார்கள்.

விடுதலைப் புலிகளின் காலத்தில் நான் அமைச்சராக இருந்த போது என்னைக் கொல்ல வந்தவருக்கு ஜனாதிபதியாக வந்தவுடன் மன்னிப்பளித்து அவரது குடும்பத்துடன் இணைத்தமையை நான் செய்த பாக்கியமாகவே கருதுகிறேன்.

இந்த நாட்டு மக்கள் அனைவரும் இலங்கையர்கள் என்ற நோக்குடன் ஒன்று சேர வேண்டும். எனக் குறிப்பிட்டார்.

பட்டினியால் வாடும் மக்களை வாழ வைப்பதற்கு கைகளிலே பணமுள்ள முதலாளிகள் சிந்திக்க வேண்டும்- மைத்திரிபால சிறிசேனா தெரிவிப்பு samugammedia உலகத்தில் மூன்றில் ஒரு பங்கு வறுமையால் வாடும் நிலையில் கோடி்கணக்கான பணச் செலவில் ரைட்டான் கப்பலைக் கட்டுவதில் பயனில்லை. பட்டினியால் வாடும் மக்களை வாழ வைப்பதற்கு கைகளிலே பணமுள்ள முதலாளிகள் சிந்திக்க வேண்டும் என முன்னாள்  ஜனாதிபதியும்  ஹீலங்கா சுதந்திரக்  கட்சியின்  தலைவருமான மைத்திரிபால  சிறிசேனா தெரிவித்துள்ளார். இன்று 29) மாலை கோண்டாவிலில் புதிதாக அமைக்கப்பட்ட மக்கள் நலன்பேணும் அமைப்பின் கட்டடத் தொகுதித் திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரை ஆற்றும் போதே இதனை தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த நாட்டிலும் வருமான வேறுபாட்டை இல்லாமல் செய்தால் தான் வறுமைக் கோட்டுக்குள் உள்ள மக்களைக் குறைக்க முடியும். நான் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் வேலை செய்யவில்லையென சில பேர் கூறுகின்றார்கள்.நான் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் வட கிழக்கில் ஜனாதிபதி செயலணி உருவாக்கி கோடிக்கணக்கான பணம் மூலம் அபிவிருத்தியை மேற்கொண்டேன். இச் செயலணிக்கான பணம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினூடாகவே வழங்கப்பட்டதுயாழ் போதான வைத்தியசாலைக் கட்டடத்திற்கு சுகாதார அமைச்சராக இருந்த காலத்தில் அடிக்கல் நாட்டி ஜனாதிபதியாக இருந்த காலத்தில் திறந்து வைத்தேன். யுத்தத்தின் பின் பலாலி விமான நிலையம் தடைப்பட்டிருந்த நிலையில்  எனது காலத்தில் மீள புனரமைத்து இந்தியாவிற்கும் இலங்கைக்குமிடையிலான விமான மூல பயணத்திற்கு வழிவகுத்தேன்.நீண்ட காலமாக இராணுவத்தால் அதியுயர் பாதுகாப்பு  வலயமாக காணப்பட்ட காணிகளில் 98% காணிகளை மக்கள் பாவனைக்காக விடுவித்ததுடன் மீள் குடியேறிய மக்களுக்கு இந்தியவின் உதவியுடன் வீடுகளைக் கட்டிக்கொடுக்கும் நடவடிக்கைகளையும் எடுத்தேன்இதே வேளை எனது  காலத்தில் காங்கேசன்துறைப்  பகுதியில் கட்டப்பட்ட ஜனாதிபதி மாளிகையின் வேலைத்திட்டம் நிறைவுறாமல் இருந்தது.  அது முடிவுற்றிருந்தால் ரென்டர் மூலம் தனியாருக்கு வழங்கி வருமானமீட்ட நடவடிக்கை எடுத்திருப்பேன்.எது எவ்வாறாயினும் சில ஊடகங்களும் ஊடகவியளாளர்களும் என்னை பொய்யான தகவல்களை பயன்படுத்தி எழுதுகிறார்கள்.விடுதலைப் புலிகளின் காலத்தில் நான் அமைச்சராக இருந்த போது என்னைக் கொல்ல வந்தவருக்கு ஜனாதிபதியாக வந்தவுடன் மன்னிப்பளித்து அவரது குடும்பத்துடன் இணைத்தமையை நான் செய்த பாக்கியமாகவே கருதுகிறேன்.இந்த நாட்டு மக்கள் அனைவரும் இலங்கையர்கள் என்ற நோக்குடன் ஒன்று சேர வேண்டும். எனக் குறிப்பிட்டார்.

Advertisement

Advertisement

Advertisement