• Sep 21 2024

யாழ் மாவட்டத்தில் பல்வேறு சந்திப்புக்களில் ஈடுபடவுள்ள மைத்திரிபால சிறிசேன! samugammedia

Tamil nila / Jun 28th 2023, 8:08 pm
image

Advertisement

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன யாழ் மாவட்டத்தில் பல்வேறு சந்திப்புக்களில் ஈடுபடவுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் அழைப்பின் பெயரில் யாழ்ப்பாணத்திற்கு வருகைதரும் மைத்திரிபால சிறிசேனா, நாளை வியாழக்கிழமை(29) முதல் மூன்று நாட்கள் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து பல்வேறு பொது நிகழ்வுகளிலும்,சந்திப்புக்களிலும் ஈடுபடவுள்ளார்.

யாழ்ப்பாணம் மறை மாவட்ட ஆயருடனான சந்திப்பு, ஆரியகுளம் ஸ்ரீநாக விகாரை வழிபாடு, நல்லூர் கந்தசுவாமி ஆலய வழிபாடு, யாழ்ப்பாணம் ஜும்மா பள்ளிவாசல் வழிபாடு, இந்து மத தலைவர்களுடனான சந்திப்பை மேற்கொள்ளவுள்ளதுடன் கோண்டாவில் ஆடை உற்பத்தி நிலைய திறப்பு விழா, உடுப்பிட்டி மகளீர் கல்லூரிக்கு விஜயம், விடுவிக்கப்பட  வேண்டிய காணிகளின் உரிமையாளர்களுடனானசந்திப்பு, 2015- 2019 ஆட்சிக்காலப் பகுதியில் விடுவிக்கப்பட்ட காணிகளை பார்வையிடல், பலாலி விண்மீன் விளையாட்டு கழக மைதான திறப்பு விழா உள்ளிட்ட பல்வேறுபட்ட நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளதுடன் துறைசார்ந்த தரப்புகளுடன் சந்திப்புக்களும் இடம்பெறவுள்ளது.


யாழ் மாவட்டத்தில் பல்வேறு சந்திப்புக்களில் ஈடுபடவுள்ள மைத்திரிபால சிறிசேன samugammedia ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன யாழ் மாவட்டத்தில் பல்வேறு சந்திப்புக்களில் ஈடுபடவுள்ளார்.நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் அழைப்பின் பெயரில் யாழ்ப்பாணத்திற்கு வருகைதரும் மைத்திரிபால சிறிசேனா, நாளை வியாழக்கிழமை(29) முதல் மூன்று நாட்கள் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து பல்வேறு பொது நிகழ்வுகளிலும்,சந்திப்புக்களிலும் ஈடுபடவுள்ளார்.யாழ்ப்பாணம் மறை மாவட்ட ஆயருடனான சந்திப்பு, ஆரியகுளம் ஸ்ரீநாக விகாரை வழிபாடு, நல்லூர் கந்தசுவாமி ஆலய வழிபாடு, யாழ்ப்பாணம் ஜும்மா பள்ளிவாசல் வழிபாடு, இந்து மத தலைவர்களுடனான சந்திப்பை மேற்கொள்ளவுள்ளதுடன் கோண்டாவில் ஆடை உற்பத்தி நிலைய திறப்பு விழா, உடுப்பிட்டி மகளீர் கல்லூரிக்கு விஜயம், விடுவிக்கப்பட  வேண்டிய காணிகளின் உரிமையாளர்களுடனானசந்திப்பு, 2015- 2019 ஆட்சிக்காலப் பகுதியில் விடுவிக்கப்பட்ட காணிகளை பார்வையிடல், பலாலி விண்மீன் விளையாட்டு கழக மைதான திறப்பு விழா உள்ளிட்ட பல்வேறுபட்ட நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளதுடன் துறைசார்ந்த தரப்புகளுடன் சந்திப்புக்களும் இடம்பெறவுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement