• May 05 2024

கட்சி உறுப்பினர்களை கொழும்புக்கு அவசரமாக அழைத்துள்ள மைத்திரி..!

Chithra / Mar 25th 2024, 8:20 am
image

Advertisement


வார இறுதியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அனைத்து உறுப்பினர்களையும் கொழும்புக்கு அழைக்க முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுத்துள்ளார்.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்கள், தொகுதி மற்றும் மாவட்ட அமைப்பாளர்கள், கட்சியின் அனைத்து அமைப்புகளின் பொறுப்பாளர்களும் மிக முக்கிய தீர்மானங்களை எடுப்பதற்காக கட்சியின் தலைமையகத்திற்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த கூட்டத்தில் அனைவரும் கலந்து கொள்வது கட்டாயம் என அனைத்து உறுப்பினர்களுக்கும் எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் காலங்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையில் புதிய கூட்டணியொன்று உருவாக்கப்படவுள்ளதாகவும் அதன் செயற்பாடுகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சாவின் முயற்சியின் கீழ் உருவாக்கப்படும் புதிய கூட்டணியின் செயற்பாடுகளையும் ஏப்ரல் மாதத்தில் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி எதிர்வரும் மார்ச் மாதம் முதல் மைத்திரியின் அரசியல் சந்திப்புகள் தொடர்ச்சியாக இடம்பெறும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக இந்த புதிய கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கட்சி உறுப்பினர்களை கொழும்புக்கு அவசரமாக அழைத்துள்ள மைத்திரி. வார இறுதியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அனைத்து உறுப்பினர்களையும் கொழும்புக்கு அழைக்க முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுத்துள்ளார்.ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்கள், தொகுதி மற்றும் மாவட்ட அமைப்பாளர்கள், கட்சியின் அனைத்து அமைப்புகளின் பொறுப்பாளர்களும் மிக முக்கிய தீர்மானங்களை எடுப்பதற்காக கட்சியின் தலைமையகத்திற்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இந்த கூட்டத்தில் அனைவரும் கலந்து கொள்வது கட்டாயம் என அனைத்து உறுப்பினர்களுக்கும் எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.எதிர்வரும் காலங்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையில் புதிய கூட்டணியொன்று உருவாக்கப்படவுள்ளதாகவும் அதன் செயற்பாடுகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சாவின் முயற்சியின் கீழ் உருவாக்கப்படும் புதிய கூட்டணியின் செயற்பாடுகளையும் ஏப்ரல் மாதத்தில் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.அதன்படி எதிர்வரும் மார்ச் மாதம் முதல் மைத்திரியின் அரசியல் சந்திப்புகள் தொடர்ச்சியாக இடம்பெறும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக இந்த புதிய கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement