• Nov 23 2024

இஷா புயலினால் முடங்கிய முக்கிய பகுதிகள் - போக்குவரத்து நடவடிக்கைகளும் ஸ்தம்பிதம்..samugammedia

mathuri / Jan 23rd 2024, 6:26 am
image

பிரித்தானியா முழுவதும் பலத்த காற்று மற்றும் மழையுடன் இஷா புயல் தாக்கியுள்ள நிலையில் அங்கு அம்பர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, லண்டனில் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், தொடருந்து மற்றும் விமான சேவைகளும்  இரத்து செய்யப்பட்டுள்ளதோடு பலத்த காற்று காரணமாக விமானங்கள் தரையிறங்க முடியாமல் திருப்பி விடப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் குறித்த புயல் தாக்கம் காரணமாக தொடருந்து சேவைகள் தாமதமாகலாம் என்றும், பல நிறுவனங்கள் சேவையை இரத்து செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதனிடையே, பர்மிங்காம் மற்றும் லண்டன் யூஸ்டன் இடையே தொடருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், மற்ற வழித்தடங்களில் குறைந்த சேவைகள் மட்டுமே முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் லண்டன் மற்றும் தென் கிழக்கின் சில பகுதிகள் தவிர பிரித்தானியாவின் அனைத்து பகுதிகளுக்கும் வானிலை அலுவலக அம்பர் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளதுடன் வடக்கு ஸ்காட்லாந்தின் சில பகுதிகளில் பலத்த காற்றுக்கு வாய்ப்பிருப்பதாக கூறி, சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இஷா புயலினால் முடங்கிய முக்கிய பகுதிகள் - போக்குவரத்து நடவடிக்கைகளும் ஸ்தம்பிதம்.samugammedia பிரித்தானியா முழுவதும் பலத்த காற்று மற்றும் மழையுடன் இஷா புயல் தாக்கியுள்ள நிலையில் அங்கு அம்பர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இதற்கமைய, லண்டனில் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், தொடருந்து மற்றும் விமான சேவைகளும்  இரத்து செய்யப்பட்டுள்ளதோடு பலத்த காற்று காரணமாக விமானங்கள் தரையிறங்க முடியாமல் திருப்பி விடப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.மேலும் குறித்த புயல் தாக்கம் காரணமாக தொடருந்து சேவைகள் தாமதமாகலாம் என்றும், பல நிறுவனங்கள் சேவையை இரத்து செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதனிடையே, பர்மிங்காம் மற்றும் லண்டன் யூஸ்டன் இடையே தொடருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், மற்ற வழித்தடங்களில் குறைந்த சேவைகள் மட்டுமே முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் உறுதி செய்யப்பட்டுள்ளது.மேலும் லண்டன் மற்றும் தென் கிழக்கின் சில பகுதிகள் தவிர பிரித்தானியாவின் அனைத்து பகுதிகளுக்கும் வானிலை அலுவலக அம்பர் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளதுடன் வடக்கு ஸ்காட்லாந்தின் சில பகுதிகளில் பலத்த காற்றுக்கு வாய்ப்பிருப்பதாக கூறி, சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement