• Sep 21 2024

போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு பெரும் அடி – பாதுகாப்பு அமைச்சின் அதிரடி நடவடிக்கை

Chithra / Jan 2nd 2023, 5:30 pm
image

Advertisement

போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக பொலிஸாருடன் இணைந்து பாதுகாப்பு அமைச்சு எடுத்துள்ள நடவடிக்கை போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளுக்கு பெரும் அடியாக அமைந்துள்ளது என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார்.

சுதந்திரமான மற்றும் அமைதியான இலங்கைக்காக, பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொலிஸாரின் தலையீட்டினால், தீவிரவாத குழுக்கள், பாதாள உலக கும்பல் மற்றும் அது தொடர்பான நடவடிக்கைகள் வெற்றிகரமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளன என்றும் குறிப்பிட்டுள்ளார்.


வருடத்தின் முதல் வேலை நாளை தொடங்கிவைத்து பாதுகாப்பு அமைச்சின் ஊழியர்களிடம் உரையாற்றிய போதே பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமால் குணரத்ன இவ்வாறு கூறியுள்ளார்.

சமீபத்திய சமூக அமைதியின்மையின் போது பொது பாதுகாப்பு மற்றும் அத்தியாவசிய சேவைகளின் தொடர்ச்சியைப் பராமரிப்பதில் ஆயுதப் படைகள் மற்றும் பொலிஸாரின் பங்கிற்கு அவர் நன்றியும் தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு பெரும் அடி – பாதுகாப்பு அமைச்சின் அதிரடி நடவடிக்கை போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக பொலிஸாருடன் இணைந்து பாதுகாப்பு அமைச்சு எடுத்துள்ள நடவடிக்கை போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளுக்கு பெரும் அடியாக அமைந்துள்ளது என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார்.சுதந்திரமான மற்றும் அமைதியான இலங்கைக்காக, பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொலிஸாரின் தலையீட்டினால், தீவிரவாத குழுக்கள், பாதாள உலக கும்பல் மற்றும் அது தொடர்பான நடவடிக்கைகள் வெற்றிகரமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளன என்றும் குறிப்பிட்டுள்ளார்.வருடத்தின் முதல் வேலை நாளை தொடங்கிவைத்து பாதுகாப்பு அமைச்சின் ஊழியர்களிடம் உரையாற்றிய போதே பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமால் குணரத்ன இவ்வாறு கூறியுள்ளார்.சமீபத்திய சமூக அமைதியின்மையின் போது பொது பாதுகாப்பு மற்றும் அத்தியாவசிய சேவைகளின் தொடர்ச்சியைப் பராமரிப்பதில் ஆயுதப் படைகள் மற்றும் பொலிஸாரின் பங்கிற்கு அவர் நன்றியும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement