• Nov 26 2024

வடக்கிற்கான ரயில் சேவை குறித்து எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானம்

Chithra / Oct 11th 2024, 10:03 am
image


மணிக்கு நூறு கிலோமீற்றர் வேகத்தில் இயங்கும் நோக்கில் நவீனமயமாக்கப்பட்ட வடக்கு ரயில்வேயின் மஹவ முதல் அநுராதபுரம் வரையிலான பகுதி முழுமையடையாத காரணத்தால், அந்தப் பகுதி ரயில்களின் வேகம் மணிக்கு நாற்பது கிலோமீட்டருக்கும் குறைவாக இயக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

புகையிரத பொது முகாமையாளர் எஸ்.எஸ்.முதலி மற்றும் புகையிரத சாரதிகள், கட்டுப்பாட்டாளர்கள், நிலைய அதிபர்கள் உள்ளிட்ட புகையிரத தொழிற்சங்க பிரதிநிதிகள் தலைமையில் புகையிரத தலைமையகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

இந்த ரயில் பாதையை வரும் 22ம் திகதி திறக்கவும், முழுமையடையாத பழுதுகளை சரி செய்ய ஆறு மாதங்களுக்கு குறைந்தபட்ச வேகத்தில் ரயிலை இயக்கவும் பொது மேலாளர் அறிவுறுத்தினார்.

இதன் காரணமாக 64 கிலோமீற்றர் தூரத்தை ஒரு மணித்தியாலத்தில் கடக்கும் முயற்சி இரண்டரை மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

வடக்கிற்கான ரயில் சேவை குறித்து எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானம் மணிக்கு நூறு கிலோமீற்றர் வேகத்தில் இயங்கும் நோக்கில் நவீனமயமாக்கப்பட்ட வடக்கு ரயில்வேயின் மஹவ முதல் அநுராதபுரம் வரையிலான பகுதி முழுமையடையாத காரணத்தால், அந்தப் பகுதி ரயில்களின் வேகம் மணிக்கு நாற்பது கிலோமீட்டருக்கும் குறைவாக இயக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.புகையிரத பொது முகாமையாளர் எஸ்.எஸ்.முதலி மற்றும் புகையிரத சாரதிகள், கட்டுப்பாட்டாளர்கள், நிலைய அதிபர்கள் உள்ளிட்ட புகையிரத தொழிற்சங்க பிரதிநிதிகள் தலைமையில் புகையிரத தலைமையகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.இந்த ரயில் பாதையை வரும் 22ம் திகதி திறக்கவும், முழுமையடையாத பழுதுகளை சரி செய்ய ஆறு மாதங்களுக்கு குறைந்தபட்ச வேகத்தில் ரயிலை இயக்கவும் பொது மேலாளர் அறிவுறுத்தினார்.இதன் காரணமாக 64 கிலோமீற்றர் தூரத்தை ஒரு மணித்தியாலத்தில் கடக்கும் முயற்சி இரண்டரை மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

Advertisement

Advertisement

Advertisement