பல அரச நிறுவனங்களின் தலைவர்கள், பணிப்பாளர் சபைகள் மற்றும் நிறுவனத் தலைவர்களை விரைவில் மாற்றுவதற்கு அரசாங்கம் ஆலோசித்து வருவதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
முன்மொழியப்பட்டுள்ள இந்த மாற்றங்கள் குறித்து அரசாங்கம் தற்போது விரிவான ஆலோசனைகளை முன்னெடுத்து வருகின்றது.
அரச நிறுவனங்களின் வினைத்திறனை அதிகரிக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படவுள்ள இந்த மாற்றங்கள் மற்றும் புதிய நியமனங்கள் குறித்த விபரங்கள் மிக விரைவில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
நிர்வாகக் கட்டமைப்பை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை அமையவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பல அரச நிறுவனங்களின் பதவிகளில் அதிரடி மாற்றம் விரைவில் புதிய நியமனங்கள் பல அரச நிறுவனங்களின் தலைவர்கள், பணிப்பாளர் சபைகள் மற்றும் நிறுவனத் தலைவர்களை விரைவில் மாற்றுவதற்கு அரசாங்கம் ஆலோசித்து வருவதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.முன்மொழியப்பட்டுள்ள இந்த மாற்றங்கள் குறித்து அரசாங்கம் தற்போது விரிவான ஆலோசனைகளை முன்னெடுத்து வருகின்றது.அரச நிறுவனங்களின் வினைத்திறனை அதிகரிக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படவுள்ள இந்த மாற்றங்கள் மற்றும் புதிய நியமனங்கள் குறித்த விபரங்கள் மிக விரைவில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.நிர்வாகக் கட்டமைப்பை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை அமையவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.