• Dec 03 2024

இணையத்தின் ஊடாக பல கோடி ரூபா பணத்தை மோசடி செய்த நபர் கைது..!

Sharmi / Dec 2nd 2024, 2:48 pm
image

இணையத்தின் ஊடாக போலியான கணக்கை ஏற்படுத்தி மக்களிடம் இருந்து பல கோடி ரூபா பெறுமதியான பணத்தை மோசடி செய்த நபரை பலாங்கொடை பொலிஸார் இன்று (02) கைது செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மொனராகலை பிரதேசத்தை சேர்ந்த 32 வயதுடைய நபரொருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

பலாங்கொட - ஓபநாயக்க பிரதேசத்தைச் சேர்ந்த இருவர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார், சம்பவம் தொடர்பில் சந்தேக நபரைக் கைது செய்துள்ளனர்.

மேலும் பல பகுதிகளில் உள்ளவர்களிடம் இருந்து இவர் தனது வங்கிக் கணக்குகளில் பணம் பெற்று மோசடி செய்துள்ளதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சந்தேக நபர் பலாங்கொடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இணையத்தின் ஊடாக பல கோடி ரூபா பணத்தை மோசடி செய்த நபர் கைது. இணையத்தின் ஊடாக போலியான கணக்கை ஏற்படுத்தி மக்களிடம் இருந்து பல கோடி ரூபா பெறுமதியான பணத்தை மோசடி செய்த நபரை பலாங்கொடை பொலிஸார் இன்று (02) கைது செய்துள்ளனர்.சம்பவம் தொடர்பில் மொனராகலை பிரதேசத்தை சேர்ந்த 32 வயதுடைய நபரொருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.பலாங்கொட - ஓபநாயக்க பிரதேசத்தைச் சேர்ந்த இருவர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார், சம்பவம் தொடர்பில் சந்தேக நபரைக் கைது செய்துள்ளனர்.மேலும் பல பகுதிகளில் உள்ளவர்களிடம் இருந்து இவர் தனது வங்கிக் கணக்குகளில் பணம் பெற்று மோசடி செய்துள்ளதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.சந்தேக நபர் பலாங்கொடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement