சிறுவர்களின் ஆபாச படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்த இளைஞர் ஒருவர், சிறுவர் மற்றும் மகளிர் துஷ்பிரயோகத் தடுப்பு பணியகத்தால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் ராகம, கெண்தலியத்தபாலுவ பகுதியில் வசிக்கும் 20 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
சிறுவர்களின் ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை முகப்புத்தகத்தின் வழியாக வெளிநாட்டினருக்கு விநியோகித்த ஒரு நபர் குறித்து சிறுவர் மற்றும் மகளிர் துஷ்பிரயோகத் தடுப்பு பணியகத்திற்கு தகவல் கிடைத்தது.
இந்தத் தகவலை புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்து, சந்தேக நபருக்குச் சொந்தமான தொலைபேசி பதிவைப் பெற்று, நடத்தப்பட்ட விசாரணைகள் மூலம் அவர் கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபரிடமிருந்து ஒரு தொலைபேசி மற்றும் ஆபாச படங்கள் அடங்கிய கணினியையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
சிறுவர்களின் தவறான படங்களை வெளிநாட்டினருக்கு விநியோகித்த இளைஞன் கைது சிறுவர்களின் ஆபாச படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்த இளைஞர் ஒருவர், சிறுவர் மற்றும் மகளிர் துஷ்பிரயோகத் தடுப்பு பணியகத்தால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் ராகம, கெண்தலியத்தபாலுவ பகுதியில் வசிக்கும் 20 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. சிறுவர்களின் ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை முகப்புத்தகத்தின் வழியாக வெளிநாட்டினருக்கு விநியோகித்த ஒரு நபர் குறித்து சிறுவர் மற்றும் மகளிர் துஷ்பிரயோகத் தடுப்பு பணியகத்திற்கு தகவல் கிடைத்தது. இந்தத் தகவலை புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்து, சந்தேக நபருக்குச் சொந்தமான தொலைபேசி பதிவைப் பெற்று, நடத்தப்பட்ட விசாரணைகள் மூலம் அவர் கைது செய்யப்பட்டார். சந்தேக நபரிடமிருந்து ஒரு தொலைபேசி மற்றும் ஆபாச படங்கள் அடங்கிய கணினியையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.