• May 04 2025

கிளிநொச்சியில் வாக்காளர் அட்டை விநியோகிக்க சென்ற தபால் ஊழியருக்கு இடையூறு விளைவித்தவர் கைது!

Chithra / Sep 10th 2024, 12:39 pm
image

 

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாந்தபுரம் பகுதியில்  வாக்காளர் அட்டை விநியோகிக்க சென்ற தபால் ஊழியருக்கு இடையூறு விளைவித்த ஒருவர் இன்று காலை  கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த ஊழியரை மறித்து தகாத வார்த்தைகளால் பேசிய குறித்த சந்தேகநபர், வாக்காளர் அட்டைகளையும் பறிக்க முற்பட்டுள்ளார்.

வாக்காளர் அட்டைகளுக்கு தீ மூட்டுவேன் எனவும் ஊழியரை அச்சுறுத்தும் வகையிலும் அச்சந்தேகநபர் செயற்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி தபாலதிபருக்கும் பொலிசாருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் சந்தேகநபரை கைது செய்து பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கிளிநொச்சியில் வாக்காளர் அட்டை விநியோகிக்க சென்ற தபால் ஊழியருக்கு இடையூறு விளைவித்தவர் கைது  கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாந்தபுரம் பகுதியில்  வாக்காளர் அட்டை விநியோகிக்க சென்ற தபால் ஊழியருக்கு இடையூறு விளைவித்த ஒருவர் இன்று காலை  கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த ஊழியரை மறித்து தகாத வார்த்தைகளால் பேசிய குறித்த சந்தேகநபர், வாக்காளர் அட்டைகளையும் பறிக்க முற்பட்டுள்ளார்.வாக்காளர் அட்டைகளுக்கு தீ மூட்டுவேன் எனவும் ஊழியரை அச்சுறுத்தும் வகையிலும் அச்சந்தேகநபர் செயற்பட்டுள்ளார்.இச்சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி தபாலதிபருக்கும் பொலிசாருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் சந்தேகநபரை கைது செய்து பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now