ரயில் டிக்கெட்டுகளை இணையத்தில் வெளிநாட்டவர்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்து மோசடியை நடத்தி வந்த நபர் ஒருவர் ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகளால் பிடிக்கப்பட்டு கண்டி சுற்றுலா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
கொழும்பிலிருந்து பதுளை செல்லும் உதர மெனிகே ரயில் டிக்கெட்டுகளை அவர் இவ்வாறு விற்பனை செய்து வந்துள்ளார்.
1,200 ரூபா பெறுமதியான பயணச்சீட்டை வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு 13,000 ரூபாவுக்கு குறித்த நபர் விற்பனை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
குறித்த நபர் கடந்த 05 மாதங்களில் 92 தடவைகள் தேசிய அடையாள அட்டையை பயன்படுத்தி ரயில் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்துள்ளார்.
மேலும் ஏனையவர்களின் தேசிய அடையாள அட்டைகளை பயன்படுத்தி ரயில் பயணச்சீட்டுகளை கொள்வனவு செய்துள்ளதாகவும் ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
ரயில் டிக்கெட்டுகளை வெளிநாட்டவர்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்தவர் கைது ரயில் டிக்கெட்டுகளை இணையத்தில் வெளிநாட்டவர்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்து மோசடியை நடத்தி வந்த நபர் ஒருவர் ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகளால் பிடிக்கப்பட்டு கண்டி சுற்றுலா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.கொழும்பிலிருந்து பதுளை செல்லும் உதர மெனிகே ரயில் டிக்கெட்டுகளை அவர் இவ்வாறு விற்பனை செய்து வந்துள்ளார். 1,200 ரூபா பெறுமதியான பயணச்சீட்டை வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு 13,000 ரூபாவுக்கு குறித்த நபர் விற்பனை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.குறித்த நபர் கடந்த 05 மாதங்களில் 92 தடவைகள் தேசிய அடையாள அட்டையை பயன்படுத்தி ரயில் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்துள்ளார்.மேலும் ஏனையவர்களின் தேசிய அடையாள அட்டைகளை பயன்படுத்தி ரயில் பயணச்சீட்டுகளை கொள்வனவு செய்துள்ளதாகவும் ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.