• Jan 13 2025

அனுமதிப்பத்திரமின்றி மணல் கடத்தலில் ஈடுபட்டவர் கைது!

Chithra / Jan 7th 2025, 12:26 pm
image


அனுமதிப்பத்திரமின்றி உழவு இயந்திரத்தைப் பயன்படுத்தி மணல் கடத்தலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

குறித்த நபர் அம்பாறை - சம்மாந்துறை காவல்துறை பிரிவிற்குட்பட்ட மல்வத்தை பகுதியில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். 

சம்மாந்துறை காவல்துறையினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

அத்துடன், மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட உழவு இயந்திரமும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. 

இந்நிலையில் சந்தேக நபர் மற்றும் மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட உழவு இயந்திரம் உள்ளிட்ட பொருட்கள் சட்ட நடவடிக்கைக்காக சம்மாந்துறை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. 

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

அனுமதிப்பத்திரமின்றி மணல் கடத்தலில் ஈடுபட்டவர் கைது அனுமதிப்பத்திரமின்றி உழவு இயந்திரத்தைப் பயன்படுத்தி மணல் கடத்தலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் அம்பாறை - சம்மாந்துறை காவல்துறை பிரிவிற்குட்பட்ட மல்வத்தை பகுதியில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். சம்மாந்துறை காவல்துறையினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட உழவு இயந்திரமும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் சந்தேக நபர் மற்றும் மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட உழவு இயந்திரம் உள்ளிட்ட பொருட்கள் சட்ட நடவடிக்கைக்காக சம்மாந்துறை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement