• Jan 08 2025

மோட்டர் சைக்கிளில் போதைபொருள் கடத்திய பெண் உட்பட இருவர் கைது

Chithra / Jan 7th 2025, 12:22 pm
image

 

கிளிநொச்சியில் இருந்து வவுனியாவிற்கு மோட்டர் சைக்கிளில் கஞ்சா கடத்தியதாக பெண் உட்பட இருவர் நேற்றையதினம்(06) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வவுனியா, ஓமந்தைப் பொலிஸார் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது கிளிநொச்சியில் இருந்து வவுனியாவிற்கு வருகை தந்த மோட்டர் சைக்கிள் ஒன்றில் இருந்து 700 கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து அதில் பயணித்த 36 வயதுடைய பெண் ஒருவரும், அவரது சகோதரர் எனக் கூறப்படும் 30 வயதுடைய ஆண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடம் இருந்து இரண்டு இலட்சத்து 72 ஆயிரம் ரூபாய் பணமும் மீட்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளின் பின் குறித்த இருவரையும் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்திருப்பதாக ஓமந்தைப் பொலிஸார் மேலும் தெரிவித்திருந்தனர்.

மோட்டர் சைக்கிளில் போதைபொருள் கடத்திய பெண் உட்பட இருவர் கைது  கிளிநொச்சியில் இருந்து வவுனியாவிற்கு மோட்டர் சைக்கிளில் கஞ்சா கடத்தியதாக பெண் உட்பட இருவர் நேற்றையதினம்(06) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.வவுனியா, ஓமந்தைப் பொலிஸார் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது கிளிநொச்சியில் இருந்து வவுனியாவிற்கு வருகை தந்த மோட்டர் சைக்கிள் ஒன்றில் இருந்து 700 கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.இதனையடுத்து அதில் பயணித்த 36 வயதுடைய பெண் ஒருவரும், அவரது சகோதரர் எனக் கூறப்படும் 30 வயதுடைய ஆண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.அவர்களிடம் இருந்து இரண்டு இலட்சத்து 72 ஆயிரம் ரூபாய் பணமும் மீட்கப்பட்டுள்ளது.மேலதிக விசாரணைகளின் பின் குறித்த இருவரையும் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்திருப்பதாக ஓமந்தைப் பொலிஸார் மேலும் தெரிவித்திருந்தனர்.

Advertisement

Advertisement

Advertisement