கற்பிட்டி - குறிஞ்சிம்பிட்டி மற்றும் சின்னக்குடிரிப்பு ஆகிய பகுதிகளில் இருந்து ஒரு கிலோ கேரளக் கஞ்சாவுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று (1) கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வடமேற்கு கடற்படை கட்டளையின் SLNS விஜய கடற்படையினருடன் இணைந்து புத்தளம் பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினர் குறித்த பகுதியில் மேற்கொண்ட விஷேட சோதனை நடவடிக்கையின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கற்பிட்டி - குறிஞ்சிப்பிட்டி பகுதியில் கெப் வண்டி ஓன்றை சோதனையிட்ட போது, அந்த வண்டியில் 800 கிராம் கேரளா கஞ்சா இருந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, அந்த கெப் வண்டியில் இருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதுடன், கெப் ரக வாகனம் மற்றும் கஞ்சா என்பவற்றையும் பொலிஸார் பறிமுதல் செய்தனர்.
அதனைத் தொடர்ந்து சின்னக்குடியிருப்பு பகுதியில் உள்ள சந்தேகநபரின் வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது வீட்டிலிருந்து மேலதிகமாக 200 கிராம் கேரளா கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டதுடன், அதுவும் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த நடவடிக்கையில் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவின் மொத்த மதிப்பு நான்கு இலட்சம் என நம்பப்படுகிறது.
இந்த நடவடிக்கையில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கற்பிட்டி சின்னக்குடியிருப்பு பிரதேசத்தில் வசிக்கும் 56 வயதுடையவர் எனவும் கடற்படையினர் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர், அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா மற்றும் கெப் வண்டி என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கற்பிட்டி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளாதகவும் கடற்படையினர் கூறினர்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை கற்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
புத்தளத்தில் ஒரு கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது கற்பிட்டி - குறிஞ்சிம்பிட்டி மற்றும் சின்னக்குடிரிப்பு ஆகிய பகுதிகளில் இருந்து ஒரு கிலோ கேரளக் கஞ்சாவுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று (1) கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.வடமேற்கு கடற்படை கட்டளையின் SLNS விஜய கடற்படையினருடன் இணைந்து புத்தளம் பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினர் குறித்த பகுதியில் மேற்கொண்ட விஷேட சோதனை நடவடிக்கையின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.கற்பிட்டி - குறிஞ்சிப்பிட்டி பகுதியில் கெப் வண்டி ஓன்றை சோதனையிட்ட போது, அந்த வண்டியில் 800 கிராம் கேரளா கஞ்சா இருந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இதனையடுத்து, அந்த கெப் வண்டியில் இருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதுடன், கெப் ரக வாகனம் மற்றும் கஞ்சா என்பவற்றையும் பொலிஸார் பறிமுதல் செய்தனர்.அதனைத் தொடர்ந்து சின்னக்குடியிருப்பு பகுதியில் உள்ள சந்தேகநபரின் வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது வீட்டிலிருந்து மேலதிகமாக 200 கிராம் கேரளா கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டதுடன், அதுவும் பறிமுதல் செய்யப்பட்டது.இந்த நடவடிக்கையில் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவின் மொத்த மதிப்பு நான்கு இலட்சம் என நம்பப்படுகிறது. இந்த நடவடிக்கையில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கற்பிட்டி சின்னக்குடியிருப்பு பிரதேசத்தில் வசிக்கும் 56 வயதுடையவர் எனவும் கடற்படையினர் தெரிவித்தனர்.கைது செய்யப்பட்ட சந்தேக நபர், அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா மற்றும் கெப் வண்டி என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கற்பிட்டி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளாதகவும் கடற்படையினர் கூறினர்.இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை கற்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.