அரம பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய நபர் ஒருவர் ஐஸ் போதைப்பொருளை அலுமாரியில் சூட்சுமமாக மறைத்து வைத்திருந்த குற்ற சாட்டில் கைது செய்யட்டுள்ளார் .
குறித்த சந்தேக நபர் அரநாயக்க பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலைத் தொடர்ந்து நேற்று (03) கைது செய்யப்பட்டுள்ளார்.
டுபாயில் பதுங்கியுள்ள திலினி என்ற போதைப்பொருள் கடத்தல்காரரால் இப் போதைப்பொருட்கள் இந்த நாட்டிற்கு அனுப்பப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வௌியிட்டனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 40இற்கும் மேற்பட்ட வாகனங்களைத் திருடியமை உள்ளிட்ட பல்வேறு குற்றங்களுக்காக நீதிமன்றத்தால் தண்டனை வழங்கப்பட்டவர் எனவும் கூறப்படுகின்றது .
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று மாவனெல்ல மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவதோடு மேலதிக விசாரணைகளுக்காக 48 மணி நேர தடுப்புக்காவல் உத்தரவு பெறப்படும் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்
அலுமாரியில் சூட்சுமமாக மறைத்து வைத்திருந்த போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது அரம பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய நபர் ஒருவர் ஐஸ் போதைப்பொருளை அலுமாரியில் சூட்சுமமாக மறைத்து வைத்திருந்த குற்ற சாட்டில் கைது செய்யட்டுள்ளார் .குறித்த சந்தேக நபர் அரநாயக்க பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலைத் தொடர்ந்து நேற்று (03) கைது செய்யப்பட்டுள்ளார். டுபாயில் பதுங்கியுள்ள திலினி என்ற போதைப்பொருள் கடத்தல்காரரால் இப் போதைப்பொருட்கள் இந்த நாட்டிற்கு அனுப்பப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வௌியிட்டனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 40இற்கும் மேற்பட்ட வாகனங்களைத் திருடியமை உள்ளிட்ட பல்வேறு குற்றங்களுக்காக நீதிமன்றத்தால் தண்டனை வழங்கப்பட்டவர் எனவும் கூறப்படுகின்றது .கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று மாவனெல்ல மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவதோடு மேலதிக விசாரணைகளுக்காக 48 மணி நேர தடுப்புக்காவல் உத்தரவு பெறப்படும் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்