ராமநாதபுரம் மாவட்டம் புதுமடம் கடற்கரை வழியாக இலங்கைக்குச் சட்டவிரோதமாகக் கடத்த முயன்ற 7 லட்சம் வெளிநாட்டுச் சிகரெட்டுகளை மெரைன் போலீஸார் அதிரடியாகப் பறிமுதல் செய்ததுடன் நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே உள்ள புதுமடம் கடற்கரைப் பகுதியில் இன்று (18) அதிகாலை ஒரு மணி அளவில், படகு மூலம் இலங்கைக்குப் பொருட்கள் கடத்தப்பட இருப்பதாக புதுமடம் மெரைன் போலீஸாருக்கும், கீழக்கரை சுங்கத்துறை அதிகாரிகளுக்கும் ரகசியத் தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் அதிகாரிகள் அந்தப் பகுதியில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.
இதன்போது கடற்கரையில் நின்றிருந்த ஒரு சரக்கு வாகனத்திலிருந்து மர்ம நபர்கள் சிலர் மூட்டைகளை இறக்கிப் பதுக்கி வைத்திருப்பதை போலீஸார் அவதானித்தனர். அதன்பின்னர் அவர்களைப் பிடிக்க முயன்றபோது, அங்கிருந்தவர்களில் சிலர் இருளைப் பயன்படுத்தித் தப்பியோடினர். எனினும், அங்கிருந்த ஒருவரை போலீஸார் மடக்கிப் பிடித்தனர்.
அத்துடன் அங்கிருந்த 35 சாக்கு மூட்டைகளைச் சோதனையிட்டபோது, அவற்றில் 7 லட்சம் வெளிநாட்டுச் சிகரெட்டுகள் இருப்பது கண்டறியப்பட்டது. இதன் சர்வதேச சந்தை மதிப்பு சுமார் ரூ.91 லட்சம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட சரக்கு வாகனத்தையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.
விசாரணையில், பிடிபட்ட நபர் புதுமடம் மேற்குத் தெருவைச் சேர்ந்த முருகன் (38) என்பது தெரியவந்தது. கைதான நபரையும், பறிமுதல் செய்யப்பட்ட சிகரெட் மற்றும் வாகனத்தையும் மெரைன் போலீஸார் சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
இலங்கைக்கு கடத்த முயன்ற கோடிக்கணக்கான சிகரெட் - அதிரடி சோதனையில் சிக்கிய நபர் ராமநாதபுரம் மாவட்டம் புதுமடம் கடற்கரை வழியாக இலங்கைக்குச் சட்டவிரோதமாகக் கடத்த முயன்ற 7 லட்சம் வெளிநாட்டுச் சிகரெட்டுகளை மெரைன் போலீஸார் அதிரடியாகப் பறிமுதல் செய்ததுடன் நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே உள்ள புதுமடம் கடற்கரைப் பகுதியில் இன்று (18) அதிகாலை ஒரு மணி அளவில், படகு மூலம் இலங்கைக்குப் பொருட்கள் கடத்தப்பட இருப்பதாக புதுமடம் மெரைன் போலீஸாருக்கும், கீழக்கரை சுங்கத்துறை அதிகாரிகளுக்கும் ரகசியத் தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் அதிகாரிகள் அந்தப் பகுதியில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.இதன்போது கடற்கரையில் நின்றிருந்த ஒரு சரக்கு வாகனத்திலிருந்து மர்ம நபர்கள் சிலர் மூட்டைகளை இறக்கிப் பதுக்கி வைத்திருப்பதை போலீஸார் அவதானித்தனர். அதன்பின்னர் அவர்களைப் பிடிக்க முயன்றபோது, அங்கிருந்தவர்களில் சிலர் இருளைப் பயன்படுத்தித் தப்பியோடினர். எனினும், அங்கிருந்த ஒருவரை போலீஸார் மடக்கிப் பிடித்தனர்.அத்துடன் அங்கிருந்த 35 சாக்கு மூட்டைகளைச் சோதனையிட்டபோது, அவற்றில் 7 லட்சம் வெளிநாட்டுச் சிகரெட்டுகள் இருப்பது கண்டறியப்பட்டது. இதன் சர்வதேச சந்தை மதிப்பு சுமார் ரூ.91 லட்சம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட சரக்கு வாகனத்தையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.விசாரணையில், பிடிபட்ட நபர் புதுமடம் மேற்குத் தெருவைச் சேர்ந்த முருகன் (38) என்பது தெரியவந்தது. கைதான நபரையும், பறிமுதல் செய்யப்பட்ட சிகரெட் மற்றும் வாகனத்தையும் மெரைன் போலீஸார் சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.