• Nov 04 2024

நண்பர்களுடன் மது விருந்தில் ஈடுபட்ட நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி - முதலையிடம் சிக்கி பலி

Chithra / Oct 6th 2024, 8:08 am
image

Advertisement

 

ஸ்ரீபுர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெமுனுபுர பிரதேசத்தில் மொர ஓயாவை கடக்க சென்ற நபர் ஒருவரை முதலை ஒன்று பிடித்து இழுத்துச் சென்ற சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கெமுனுபுர - பதவி ஶ்ரீபுர பிரதேசத்தில் வசிக்கும் 60 வயதுடைய நபரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்

உயிரிழந்த நபர், நேற்று முன்தினம் மாலை நண்பர்கள் இருவருடன் மொர ஓயாவை கடந்து ரஞ்சித் மங்கட பகுதியில் மது அருந்தியுள்ளார்.

இதன்போது, வீட்டுக்குச் சென்று இறைச்சி கொண்டு வருவதற்காக மீண்டும் ஆற்றைக் கடந்தபோது, ​​அவரை முதலை பிடித்துச் சென்றுள்ளது.

சடலத்தின் ஒரு பகுதியை முதலை தின்றுவிட்டதை அவதானித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் அனுராதபுரம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீபுர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நண்பர்களுடன் மது விருந்தில் ஈடுபட்ட நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி - முதலையிடம் சிக்கி பலி  ஸ்ரீபுர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெமுனுபுர பிரதேசத்தில் மொர ஓயாவை கடக்க சென்ற நபர் ஒருவரை முதலை ஒன்று பிடித்து இழுத்துச் சென்ற சம்பவம் இடம்பெற்றுள்ளது.கெமுனுபுர - பதவி ஶ்ரீபுர பிரதேசத்தில் வசிக்கும் 60 வயதுடைய நபரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்உயிரிழந்த நபர், நேற்று முன்தினம் மாலை நண்பர்கள் இருவருடன் மொர ஓயாவை கடந்து ரஞ்சித் மங்கட பகுதியில் மது அருந்தியுள்ளார்.இதன்போது, வீட்டுக்குச் சென்று இறைச்சி கொண்டு வருவதற்காக மீண்டும் ஆற்றைக் கடந்தபோது, ​​அவரை முதலை பிடித்துச் சென்றுள்ளது.சடலத்தின் ஒரு பகுதியை முதலை தின்றுவிட்டதை அவதானித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் அனுராதபுரம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.ஸ்ரீபுர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement