• Jan 24 2025

பண்ணையை சுத்தம் செய்துகொண்டிருந்தவர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

Chithra / Dec 8th 2024, 3:21 pm
image

 

கண்டி - ஹதரலியத்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெதுனுபிட்டிய பிரதேசத்தில் நேற்று சனிக்கிழமை (07) மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஹதரலியத்த பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் தெதுனுபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 46 வயதுடையவர் ஆவார்.

இந்த நபர் கால்நடை பண்ணையொன்றை நடத்தி வந்ததாகவும், பண்ணையை சுத்தம் செய்துகொண்டிருந்தபோதே மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சடலம் ரம்புக்கனை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதென பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹதரலியத்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.  

பண்ணையை சுத்தம் செய்துகொண்டிருந்தவர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு  கண்டி - ஹதரலியத்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெதுனுபிட்டிய பிரதேசத்தில் நேற்று சனிக்கிழமை (07) மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஹதரலியத்த பொலிஸார் தெரிவித்தனர்.உயிரிழந்தவர் தெதுனுபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 46 வயதுடையவர் ஆவார்.இந்த நபர் கால்நடை பண்ணையொன்றை நடத்தி வந்ததாகவும், பண்ணையை சுத்தம் செய்துகொண்டிருந்தபோதே மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.சடலம் ரம்புக்கனை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதென பொலிஸார் தெரிவித்தனர்.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹதரலியத்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.  

Advertisement

Advertisement

Advertisement