• Nov 28 2024

யாழில் மனைவியின் கண்ணெதிரே கணவன் வெட்டிக் கொலை: கடற்படையின் அதிரடி உத்தரவு

Chithra / Mar 15th 2024, 10:08 am
image

 

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, பொன்னாலை கடற்படை முகாமுக்கு அருகாமையில், அண்மையில் தம்பதியர் கடத்திச் செல்லப்பட்ட சம்பவத்தின் போது, கடற்படையினர் நடந்துகொண்ட விதம் குறித்து, இலங்கை கடற்படை விரிவான விசேட விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக கடற்படையின் ஊடகப் பேச்சாளர் கெப்டன் கயான் விக்ரமசூரிய தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தின்போது கடற்படையினர் ஏதேனும் தவறு செய்திருந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

கடந்த மார்ச் 11 ஆம் திகதி, யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொன்னாலை கடற்படை முகாமிற்கு அருகில் ஒரு தம்பதியினர் கொடூரமாக தாக்கி கடத்திச் செல்லப்பட்ட நிலையில், கணவர் வெட்டிக் கொல்லப்பட்டார்.

இதன்போது குறித்த தம்பதியினர் பாதுகாப்பு தேடி கடற்படை முகாமுக்குள் சென்றவேளை அவர்களை கடற்படையினர் விரட்டியடித்துள்ளனர்.

அத்துடன் வன்முறைக்குழுவினர் அவர்களை கடத்திச்செல்வதை தடுக்கவில்லை என்றும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ஐந்து பேரும் இன்றைய தினம் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.


யாழில் மனைவியின் கண்ணெதிரே கணவன் வெட்டிக் கொலை: கடற்படையின் அதிரடி உத்தரவு  யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, பொன்னாலை கடற்படை முகாமுக்கு அருகாமையில், அண்மையில் தம்பதியர் கடத்திச் செல்லப்பட்ட சம்பவத்தின் போது, கடற்படையினர் நடந்துகொண்ட விதம் குறித்து, இலங்கை கடற்படை விரிவான விசேட விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக கடற்படையின் ஊடகப் பேச்சாளர் கெப்டன் கயான் விக்ரமசூரிய தெரிவித்துள்ளார்.இந்த சம்பவத்தின்போது கடற்படையினர் ஏதேனும் தவறு செய்திருந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.கடந்த மார்ச் 11 ஆம் திகதி, யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொன்னாலை கடற்படை முகாமிற்கு அருகில் ஒரு தம்பதியினர் கொடூரமாக தாக்கி கடத்திச் செல்லப்பட்ட நிலையில், கணவர் வெட்டிக் கொல்லப்பட்டார்.இதன்போது குறித்த தம்பதியினர் பாதுகாப்பு தேடி கடற்படை முகாமுக்குள் சென்றவேளை அவர்களை கடற்படையினர் விரட்டியடித்துள்ளனர்.அத்துடன் வன்முறைக்குழுவினர் அவர்களை கடத்திச்செல்வதை தடுக்கவில்லை என்றும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.இதேவேளை குறித்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ஐந்து பேரும் இன்றைய தினம் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement