• May 03 2025

இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள வந்தவரை கொன்ற நபர்

Chithra / May 3rd 2025, 11:42 am
image


சீகிரியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் நேற்று இரவு ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள வந்த ஒருவரை மற்றொரு நபர் தாக்கி கொன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் ஹென்வலயகம, கிம்பிஸ்ஸ பகுதியைச் சேர்ந்த 55 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவருக்கும் சந்தேக நபருக்கும் இடையே சிறிது காலமாக இருந்த தனிப்பட்ட தகராறின் விளைவாக இந்தக் கொலை நடந்திருப்பது பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சடலம் கிம்பிஸ்ஸா மருத்துவமனையின் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபரை கைது செய்வதற்காக சிகிரியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள வந்தவரை கொன்ற நபர் சீகிரியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் நேற்று இரவு ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள வந்த ஒருவரை மற்றொரு நபர் தாக்கி கொன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.உயிரிழந்தவர் ஹென்வலயகம, கிம்பிஸ்ஸ பகுதியைச் சேர்ந்த 55 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.உயிரிழந்தவருக்கும் சந்தேக நபருக்கும் இடையே சிறிது காலமாக இருந்த தனிப்பட்ட தகராறின் விளைவாக இந்தக் கொலை நடந்திருப்பது பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.சடலம் கிம்பிஸ்ஸா மருத்துவமனையின் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.சந்தேக நபரை கைது செய்வதற்காக சிகிரியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement