• Apr 02 2025

கோடாரியால் மனைவியை அடித்துகொன்ற கணவன் எடுத்த விபரீத முடிவு

Chithra / Sep 8th 2024, 8:34 am
image


மிஹிந்தலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குஞ்சிக்குளம் பகுதியில் மனைவியை கூரிய ஆயுதத்தால் அடித்து கொலை செய்துவிட்டு கணவன் உயிர்மாய்த்த  சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

இச்சம்பவம் நேற்று (07)  இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மிஹிந்தலை, குஞ்சிக்குளம் பகுதியைச் சேர்ந்த 61 வயதுடைய ஆணும் 56 வயதுடைய பெண்ணும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

கடந்த 06 ஆம் திகதி இரவு கணவன், மனைவிக்கு இடையில்  ஏற்பட்ட தகராறில் கணவரே மனைவியை கொலை செய்துவிட்டு,

தானும் உயிர்மாய்த்து கொண்டதாக பொலிஸார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதன்போது கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கோடாரி பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மிஹிந்தலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கோடாரியால் மனைவியை அடித்துகொன்ற கணவன் எடுத்த விபரீத முடிவு மிஹிந்தலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குஞ்சிக்குளம் பகுதியில் மனைவியை கூரிய ஆயுதத்தால் அடித்து கொலை செய்துவிட்டு கணவன் உயிர்மாய்த்த  சம்பவமொன்று பதிவாகியுள்ளது.இச்சம்பவம் நேற்று (07)  இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.மிஹிந்தலை, குஞ்சிக்குளம் பகுதியைச் சேர்ந்த 61 வயதுடைய ஆணும் 56 வயதுடைய பெண்ணும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.கடந்த 06 ஆம் திகதி இரவு கணவன், மனைவிக்கு இடையில்  ஏற்பட்ட தகராறில் கணவரே மனைவியை கொலை செய்துவிட்டு,தானும் உயிர்மாய்த்து கொண்டதாக பொலிஸார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.இதன்போது கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கோடாரி பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மிஹிந்தலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now