• Jan 05 2025

வெளிநாட்டிலிருந்து மனைவியின் வங்கி கணக்கிற்கு பணம் அனுப்பியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

Chithra / Aug 3rd 2024, 8:28 am
image


வெளிநாட்டில் வசிக்கும் கணவனால் மனைவியின் வங்கிக் கணக்கிற்கு அனுப்பி வைக்கப்பட்ட 12 இலட்சம் ரூபா பணம் மூன்று நிமிடத்திற்குள் மற்றுமொரு வங்கிக் கணக்கிற்கு மாற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் காலி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வெளிநாட்டில் உள்ள கணவன் காலி - கிந்தோட்டை பிரதேசத்தில் உள்ள தனது மனைவியின் வங்கிக் கணக்கிற்குக் கடந்த 31 ஆம் திகதி 12 இலட்சம் ரூபா பணத்தை அனுப்பி வைத்துள்ளார்.

இந்நிலையில், மனைவியின் வங்கிக்கணக்கிற்கு அனுப்பிவைக்கப்பட்ட 12 இலட்சம் ரூபா பணம் மாவனெல்லை பிரதேசத்தில் உள்ள மற்றுமொரு வங்கிக் கணக்கிற்கு மாற்றப்பட்டதாகக் கணவரின் கையடக்க தொலைபேசிக்கு குறுஞ்செய்தி ஒன்று கிடைத்துள்ளது.

இதனையடுத்து, வெளிநாட்டில் உள்ள கணவர் இது தொடர்பில் தனது மனைவியிடம் கேட்ட போது, தான் அந்த பணத்தை வேறொரு வங்கிக்கணக்கிற்கு மாற்றவில்லை என கூறியுள்ளார்.

இந்நிலையில், மனைவி இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வெளிநாட்டிலிருந்து மனைவியின் வங்கி கணக்கிற்கு பணம் அனுப்பியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி வெளிநாட்டில் வசிக்கும் கணவனால் மனைவியின் வங்கிக் கணக்கிற்கு அனுப்பி வைக்கப்பட்ட 12 இலட்சம் ரூபா பணம் மூன்று நிமிடத்திற்குள் மற்றுமொரு வங்கிக் கணக்கிற்கு மாற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் காலி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.வெளிநாட்டில் உள்ள கணவன் காலி - கிந்தோட்டை பிரதேசத்தில் உள்ள தனது மனைவியின் வங்கிக் கணக்கிற்குக் கடந்த 31 ஆம் திகதி 12 இலட்சம் ரூபா பணத்தை அனுப்பி வைத்துள்ளார்.இந்நிலையில், மனைவியின் வங்கிக்கணக்கிற்கு அனுப்பிவைக்கப்பட்ட 12 இலட்சம் ரூபா பணம் மாவனெல்லை பிரதேசத்தில் உள்ள மற்றுமொரு வங்கிக் கணக்கிற்கு மாற்றப்பட்டதாகக் கணவரின் கையடக்க தொலைபேசிக்கு குறுஞ்செய்தி ஒன்று கிடைத்துள்ளது.இதனையடுத்து, வெளிநாட்டில் உள்ள கணவர் இது தொடர்பில் தனது மனைவியிடம் கேட்ட போது, தான் அந்த பணத்தை வேறொரு வங்கிக்கணக்கிற்கு மாற்றவில்லை என கூறியுள்ளார்.இந்நிலையில், மனைவி இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement