• Mar 30 2025

தோட்ட முகாமையாளரை கதிரையில் கட்டி வைத்து தீயிட்டுக் கொளுத்திய நபர்!

Chithra / Mar 27th 2025, 8:42 am
image

 

காலி பகுதியில் தோட்ட முகாமையாளர் ஒருவரைக் கதிரையொன்றில் கட்டி வைத்து தீயிட்டுக் கொளுத்திய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

சம்பவம் தொடர்பில் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மாப்பலகம குடமலான தோட்டத்தில் பழமை வாய்ந்த தேயிலை தொழிற்சாலைக்குக் கொண்டு வந்து முகாமையாளரை தீயிட்டுக் கொளுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பின்னர் குறித்த முகாமையாளர் கூச்சலிட்டதால் தோட்டத்தில் பணியாற்றும் நபர்கள் சம்பவ இடத்திற்கு வருகை தந்து தீயை அணைத்துள்ளதாக கூறியுள்ளனர்.

இதன் பின்னர் அந்த தோட்ட முகாமையாளரை எல்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

முகாமையாளரின் முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் கடும் தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தீ வைத்தமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

தோட்ட முகாமையாளரை கதிரையில் கட்டி வைத்து தீயிட்டுக் கொளுத்திய நபர்  காலி பகுதியில் தோட்ட முகாமையாளர் ஒருவரைக் கதிரையொன்றில் கட்டி வைத்து தீயிட்டுக் கொளுத்திய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.சம்பவம் தொடர்பில் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.மாப்பலகம குடமலான தோட்டத்தில் பழமை வாய்ந்த தேயிலை தொழிற்சாலைக்குக் கொண்டு வந்து முகாமையாளரை தீயிட்டுக் கொளுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.பின்னர் குறித்த முகாமையாளர் கூச்சலிட்டதால் தோட்டத்தில் பணியாற்றும் நபர்கள் சம்பவ இடத்திற்கு வருகை தந்து தீயை அணைத்துள்ளதாக கூறியுள்ளனர்.இதன் பின்னர் அந்த தோட்ட முகாமையாளரை எல்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.முகாமையாளரின் முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் கடும் தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.தீ வைத்தமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

Advertisement

Advertisement

Advertisement