• Nov 26 2024

கனடா பொறியியலாளர் என கூறி பெண்ணை ஏமாற்றி பணம் பெற்ற நபர் - காவல்துறையினர் தீவிர தேடுதல்..!samugammedia

mathuri / Dec 29th 2023, 10:25 am
image

ஹோமாகம பிரதேசத்தில், கொடகமவில் அழகு நிலையம் ஒன்றை நடத்தி வரும் யுவதி ஒருவரை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி அவரிடம் இருந்து 2.5 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பணத்தை மோசடி செய்த நபரை பொலிஸார் தேடி வருகின்றனர்.

சந்தேக நபர் தன்னை ஒரு மென்பொருள் பொறியியலாளர் என்றும் கனடாவில் வசிப்பவர் என்றும் அறிமுகப்படுத்தியதால், தனது தாயார் தான் வாங்கிய இரண்டு மாடி வீட்டில் குறித்த நபரை தங்க அனுமதித்துள்ளார் என்றும் குறித்த யுவதி தெரிவித்துள்ளார்.

குறித்த நபரின் வங்கி பரிவர்த்தனைகளுக்காக யுவதி வங்கி கணக்கை  தொடங்கியதாகவும் , அவர் பல சந்தர்ப்பங்களில் குறித்த பெண்ணிடமிருந்து 2.5 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான தொகையை பொய்யான காரணங்களின் கீழ் கடனாக பெற்றுள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது. 

சந்தேக நபர் இரண்டு பிள்ளைகளின் தந்தை எனவும் அவர் தனது மனைவியை தனது சகோதரி என அறிமுகப்படுத்தியதாகவும் முறைப்பாட்டாளருடன் அடிக்கடி தொலைபேசியில் உரையாடியதாகவும் தனது உண்மையான அடையாளத்தை மறைக்க தலையில் போலி முடி அணிந்திருந்ததாகவும் பொலிஸாரின்   விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


கனடா பொறியியலாளர் என கூறி பெண்ணை ஏமாற்றி பணம் பெற்ற நபர் - காவல்துறையினர் தீவிர தேடுதல்.samugammedia ஹோமாகம பிரதேசத்தில், கொடகமவில் அழகு நிலையம் ஒன்றை நடத்தி வரும் யுவதி ஒருவரை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி அவரிடம் இருந்து 2.5 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பணத்தை மோசடி செய்த நபரை பொலிஸார் தேடி வருகின்றனர்.சந்தேக நபர் தன்னை ஒரு மென்பொருள் பொறியியலாளர் என்றும் கனடாவில் வசிப்பவர் என்றும் அறிமுகப்படுத்தியதால், தனது தாயார் தான் வாங்கிய இரண்டு மாடி வீட்டில் குறித்த நபரை தங்க அனுமதித்துள்ளார் என்றும் குறித்த யுவதி தெரிவித்துள்ளார்.குறித்த நபரின் வங்கி பரிவர்த்தனைகளுக்காக யுவதி வங்கி கணக்கை  தொடங்கியதாகவும் , அவர் பல சந்தர்ப்பங்களில் குறித்த பெண்ணிடமிருந்து 2.5 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான தொகையை பொய்யான காரணங்களின் கீழ் கடனாக பெற்றுள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது. சந்தேக நபர் இரண்டு பிள்ளைகளின் தந்தை எனவும் அவர் தனது மனைவியை தனது சகோதரி என அறிமுகப்படுத்தியதாகவும் முறைப்பாட்டாளருடன் அடிக்கடி தொலைபேசியில் உரையாடியதாகவும் தனது உண்மையான அடையாளத்தை மறைக்க தலையில் போலி முடி அணிந்திருந்ததாகவும் பொலிஸாரின்   விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement