மோட்டார் சைக்கிள் - கார் ஒன்றுடன் ஒன்று நேருக்கு மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்து யாழ்ப்பாணம் - தாவடி பகுதியில் இன்று மாலை சம்பவித்துள்ளது.
யாழ்ப்பாணத்திலிருந்து காங்கேசன்துறை நோக்கி காரொன்று பயணித்துக் கொண்டிருந்த வேளை, மோட்டார் சைக்கிளில் சென்ற நபர் ஒருவர், அவதானமின்றி திடீரென வீதியைக் கடக்க முற்பட்டவேளை மோட்டார் சைக்கிளும் காரும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.
விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவரை கார் மோதிய வேளை, குறித்த நபர் காரின் மேற்பகுதியில் பாய்ந்து வீதியில் விழுந்துள்ளார்.
இருப்பினும் உயிர் சேதங்கள் எவையும் ஏற்படவில்லை என்றும் விபத்திற்குள்ளான மோட்டார் சைக்கிளும் காரும் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நபர் காரின் மேல் பாய்ந்து கிழே விழுந்து விபத்திற்குள்ளான சம்பவம் அருகிலிருந்த சிசிரிவி காணொளியில் பதிவாகி வெளிவந்து பதற வைத்துள்ளது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
மோட்டார் சைக்கிளில் சென்று கார் மீது பாய்ந்த நபர்; தெய்வாதீனமாக உயிர்தப்பினார் -பதறவைக்கும் காணொளி மோட்டார் சைக்கிள் - கார் ஒன்றுடன் ஒன்று நேருக்கு மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து யாழ்ப்பாணம் - தாவடி பகுதியில் இன்று மாலை சம்பவித்துள்ளது.யாழ்ப்பாணத்திலிருந்து காங்கேசன்துறை நோக்கி காரொன்று பயணித்துக் கொண்டிருந்த வேளை, மோட்டார் சைக்கிளில் சென்ற நபர் ஒருவர், அவதானமின்றி திடீரென வீதியைக் கடக்க முற்பட்டவேளை மோட்டார் சைக்கிளும் காரும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது. விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவரை கார் மோதிய வேளை, குறித்த நபர் காரின் மேற்பகுதியில் பாய்ந்து வீதியில் விழுந்துள்ளார். இருப்பினும் உயிர் சேதங்கள் எவையும் ஏற்படவில்லை என்றும் விபத்திற்குள்ளான மோட்டார் சைக்கிளும் காரும் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த நபர் காரின் மேல் பாய்ந்து கிழே விழுந்து விபத்திற்குள்ளான சம்பவம் அருகிலிருந்த சிசிரிவி காணொளியில் பதிவாகி வெளிவந்து பதற வைத்துள்ளது. விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.