வவுனியா - போகஸ்வெவ பகுதியில் போத்தலால் தன்னை தானே தாக்கிய நபர் ஒருவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.
குறித்த பகுதியை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் நேற்றுமுன்தினம் மாலை போத்தல் ஒன்றின் மூலம் தனது வயிற்றுப் பகுதியில் குத்தியுள்ளார்.
இதனால் காயமடைந்த அவர் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி நேற்று(25) உயிரிழந்தார்.
சம்பவத்தில் போகஸ்வெவ பகுதியை சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அவரது மனைவி வெளிநாடு ஒன்றில் வசிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பாக போகஸ்வெவ பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
வவுனியாவில் போத்தலால் தன்னையே காயப்படுத்தியவர் சிகிச்சை பலனின்றி மரணம் வவுனியா - போகஸ்வெவ பகுதியில் போத்தலால் தன்னை தானே தாக்கிய நபர் ஒருவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.குறித்த பகுதியை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் நேற்றுமுன்தினம் மாலை போத்தல் ஒன்றின் மூலம் தனது வயிற்றுப் பகுதியில் குத்தியுள்ளார்.இதனால் காயமடைந்த அவர் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி நேற்று(25) உயிரிழந்தார்.சம்பவத்தில் போகஸ்வெவ பகுதியை சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அவரது மனைவி வெளிநாடு ஒன்றில் வசிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.சம்பவம் தொடர்பாக போகஸ்வெவ பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.