• May 20 2024

முன்னிலை சோசலிசக் கட்சியை வேட்டையாட சூழ்ச்சி...! குமார் குணரத்னம் தெரிவிப்பு...! samugammedia

Anaath / Sep 15th 2023, 11:44 am
image

Advertisement

ஆயுதப்போராட்டத்திற்கு நாம் தயாராகவில்லை. சிலர் நாம் ஆயுதப்போராட்டத்துக்கு தயாராவதாகக்  கூறி எமது முன்னிலை சோசலிசக் கட்சியை வேட்டையாடுவதற்கான சூழ்ச்சியில் ஈடுபடுகின்றனர்  என  அந்தக் கட்சியின் தலைவரான குமார் குணரத்னம் தெரிவித்துள்ளார் 

குறித்த விடயம் தொடர்பில்  அவர் மேலும் தெரிவிகையில் -

 'அரகலய' (மக்கள் போராட்டம்) காலகட்டத்தில் மக்கள் சக்தி பற்றி அதிகம் பேசப்பட்டது. 

நாடாளுமன்றம் உட்பட மக்கள் பிரதிநிதித்துவ சபைகளுக்கு வெளியில் கட்டியெழுப்பப்பட வேண்டிய மக்கள் சக்தி தொடர்பாக கருத்தாடல் உருவானது. ஏனெனில் கடந்த 75 வருடகாலமாக மக்கள் பிரச்சினை தீர்க்கப்படவில்லை.

அனைத்து இன மக்களும் நல்லிணக்கத்துடன் வாழும் வேலைத்திட்டம் உருவாக்கப்படவில்லை. மாறாக பொருளாதாரப் பிரச்சினை தலைதூக்கியுள்ளது . இனப்பிரச்சினை மேலோங்கியுள்ளது, அரச வளங்கள் விற்கப்பட்டன. தேர்தல் ஊடாக ஆட்சிகள் மாறின. 

ஆட்சிக்குவந்த அரசுகளால் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை. அதனால்தான் நாடாளுமன்றத்துக்கு வெளியில் மக்கள் சக்தியொன்று அவசியம் என முன்னிலை சோசலிசக் கட்சி வலியுறுத்தியது. 

எம்மை வேட்டையாடும் நோக்கில் இந்தக் கூற்றைத் திரிவுபடுத்தி சூழ்ச்சியான முறையில் பரப்புரை முன்னெடுக்கப்பட்டது. அதாவது நாடாளுமன்றத்தை, தேர்தலைப் புறக்கணிக்கும் இவர்கள், தேர்தலைவிட அரகலயவை நம்புவது. 

ஆயுதப்போராட்டத்துக்காகவே என பரப்புரை முன்னெடுக்கப்பட்டது. முன்னிலை சோசலிசக் கட்சியை வேட்டையாடும் நோக்கிலேயே இப்படியான சூழ்ச்சித் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. 

உண்மை அதுவல்ல. நாம் தேர்தல்களை எதிர்கொள்வோம். மக்கள் சக்தி ஊடாக பலத்தைக் கட்டியெழுப்புவது பற்றிப் பேசுகின்றோம் என  அவர் தெரிவித்துள்ளார். 

முன்னிலை சோசலிசக் கட்சியை வேட்டையாட சூழ்ச்சி. குமார் குணரத்னம் தெரிவிப்பு. samugammedia ஆயுதப்போராட்டத்திற்கு நாம் தயாராகவில்லை. சிலர் நாம் ஆயுதப்போராட்டத்துக்கு தயாராவதாகக்  கூறி எமது முன்னிலை சோசலிசக் கட்சியை வேட்டையாடுவதற்கான சூழ்ச்சியில் ஈடுபடுகின்றனர்  என  அந்தக் கட்சியின் தலைவரான குமார் குணரத்னம் தெரிவித்துள்ளார் குறித்த விடயம் தொடர்பில்  அவர் மேலும் தெரிவிகையில் - 'அரகலய' (மக்கள் போராட்டம்) காலகட்டத்தில் மக்கள் சக்தி பற்றி அதிகம் பேசப்பட்டது. நாடாளுமன்றம் உட்பட மக்கள் பிரதிநிதித்துவ சபைகளுக்கு வெளியில் கட்டியெழுப்பப்பட வேண்டிய மக்கள் சக்தி தொடர்பாக கருத்தாடல் உருவானது. ஏனெனில் கடந்த 75 வருடகாலமாக மக்கள் பிரச்சினை தீர்க்கப்படவில்லை.அனைத்து இன மக்களும் நல்லிணக்கத்துடன் வாழும் வேலைத்திட்டம் உருவாக்கப்படவில்லை. மாறாக பொருளாதாரப் பிரச்சினை தலைதூக்கியுள்ளது . இனப்பிரச்சினை மேலோங்கியுள்ளது, அரச வளங்கள் விற்கப்பட்டன. தேர்தல் ஊடாக ஆட்சிகள் மாறின. ஆட்சிக்குவந்த அரசுகளால் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை. அதனால்தான் நாடாளுமன்றத்துக்கு வெளியில் மக்கள் சக்தியொன்று அவசியம் என முன்னிலை சோசலிசக் கட்சி வலியுறுத்தியது. எம்மை வேட்டையாடும் நோக்கில் இந்தக் கூற்றைத் திரிவுபடுத்தி சூழ்ச்சியான முறையில் பரப்புரை முன்னெடுக்கப்பட்டது. அதாவது நாடாளுமன்றத்தை, தேர்தலைப் புறக்கணிக்கும் இவர்கள், தேர்தலைவிட அரகலயவை நம்புவது. ஆயுதப்போராட்டத்துக்காகவே என பரப்புரை முன்னெடுக்கப்பட்டது. முன்னிலை சோசலிசக் கட்சியை வேட்டையாடும் நோக்கிலேயே இப்படியான சூழ்ச்சித் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. உண்மை அதுவல்ல. நாம் தேர்தல்களை எதிர்கொள்வோம். மக்கள் சக்தி ஊடாக பலத்தைக் கட்டியெழுப்புவது பற்றிப் பேசுகின்றோம் என  அவர் தெரிவித்துள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement