வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன்,மன்னார் மாவட்டச் செயலகமும்,கலாசார பேரவையும் இணைந்து ஏற்பாடு செய்த மாவட்ட கலாசார விழா இன்றையதினம்(29) காலை மன்னார் நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது.
மன்னார் மாவட்ட செயலாளர் கனகசபாபதி கனகேஸ்வரன் தலைமையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.
சர்வமத தலைவர்களின் பங்குபற்றலுடன் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக மன்னார் மாவட்ட முன்னாள் அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டி மேல், சிறப்பு விருந்தினர்களாக மன்னார் பிரதேசச் செயலாளர் எம்.பிரதீப், மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் டி.சி.அரவிந்தராஜ், நானாட்டான் பிரதேச செயலாளர் கே.சிவசம்பு, வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள பிரதி பணிப்பாளர் திருமதி லாகினி நிருபராஜ் மற்றும் கௌரவ விருந்தினர்களாக ஆங்கிலத்துறை பேராசிரியர் ஜெயசீலன் ஞானராஜ், பொருளியல் பேராசிரியர் நேவில் மொறாயஸ், தாவரவியல் பேராசிரியர் சந்திரகாந்தா மகேந்திர நாதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
ஆரம்ப நிகழ்வாக, விருந்தினர்கள் மன்னார் மாவட்டச் செயலக வளாகத்தில் மாலை அணிவிக்கப்பட்டு பண்பாட்டு பேரணியுடன் மன்னார் நகர சபை மண்டபம் வரை அழைத்து வரப்பட்டனர்.
அதனை தொடர்ந்து அரங்க நிகழ்வுகள் இடம் பெற்றது.
இதன்போது, களிகம்பு, கூத்து வழி நடனம், கிராமிய நடனம், வில்லுப்பாட்டு, நடனம், நாட்டுக்கூத்து உள்ளிட்ட நிகழ்வுகள் பிரதேச செயலாளர் பிரிவுகள் ஊடாக அரங்கேற்றப்பட்டதோடு, கலைஞர்களும் விருந்தினர்களினால் கௌரவிக்கப்பட்டனர்.
மன்னார் மாவட்ட கலாசார விழா. வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன்,மன்னார் மாவட்டச் செயலகமும்,கலாசார பேரவையும் இணைந்து ஏற்பாடு செய்த மாவட்ட கலாசார விழா இன்றையதினம்(29) காலை மன்னார் நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது.மன்னார் மாவட்ட செயலாளர் கனகசபாபதி கனகேஸ்வரன் தலைமையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.சர்வமத தலைவர்களின் பங்குபற்றலுடன் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக மன்னார் மாவட்ட முன்னாள் அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டி மேல், சிறப்பு விருந்தினர்களாக மன்னார் பிரதேசச் செயலாளர் எம்.பிரதீப், மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் டி.சி.அரவிந்தராஜ், நானாட்டான் பிரதேச செயலாளர் கே.சிவசம்பு, வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள பிரதி பணிப்பாளர் திருமதி லாகினி நிருபராஜ் மற்றும் கௌரவ விருந்தினர்களாக ஆங்கிலத்துறை பேராசிரியர் ஜெயசீலன் ஞானராஜ், பொருளியல் பேராசிரியர் நேவில் மொறாயஸ், தாவரவியல் பேராசிரியர் சந்திரகாந்தா மகேந்திர நாதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.ஆரம்ப நிகழ்வாக, விருந்தினர்கள் மன்னார் மாவட்டச் செயலக வளாகத்தில் மாலை அணிவிக்கப்பட்டு பண்பாட்டு பேரணியுடன் மன்னார் நகர சபை மண்டபம் வரை அழைத்து வரப்பட்டனர்.அதனை தொடர்ந்து அரங்க நிகழ்வுகள் இடம் பெற்றது.இதன்போது, களிகம்பு, கூத்து வழி நடனம், கிராமிய நடனம், வில்லுப்பாட்டு, நடனம், நாட்டுக்கூத்து உள்ளிட்ட நிகழ்வுகள் பிரதேச செயலாளர் பிரிவுகள் ஊடாக அரங்கேற்றப்பட்டதோடு, கலைஞர்களும் விருந்தினர்களினால் கௌரவிக்கப்பட்டனர்.