• Dec 06 2024

ஈ.பி.டி.பியின் கொள்கை வழிமுறையை ஏற்று தமிழ் மக்கள் அணிதிரள வேண்டும்- டக்ளஸ் வலியுறுத்து..!

Sharmi / Oct 29th 2024, 7:57 pm
image

ஈ.பி.டி.பி கட்சியின் கொள்கை வழிமுறையை ஏற்று அதனுடன் இணைந்து பயணிக்க தமிழ் மக்கள் அணிதிள வேண்டும் என அக் கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ்  தேவானந்தா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வேலணை  பிரதேசத்தில் பல்வேறு பகுதிகளுக்கும் இன்றையதினம்(29) விஜயம் மேற்கொண்ட ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் ஈ.பி.டி.பியின் வீணை சின்னத்தை வலுப்படுத்தும் முகமாக பல்வேறு பிரசார கூட்டங்களில் பங்கெடுத்திருந்தார்.

இதன்போது கருத்து தெரிவித்த டக்ளஸ் தேவானந்தா,

மாற்றம் என்பது ஒவ்வொருவரிடமிருந்தும் நம்பிக்கையுடன்  உருவாக்கப்பட வேண்டும். அதுவே சமூக மாற்றத்திற்கும் தமிழ் மக்களின் அரசியல் மாற்றத்திற்கும் வழி வகுக்கும் .

அந்த நம்பிக்கையுடன் கூடிய அரசியல் மாற்றம் ஈ.பிடி.பியை பலப்படுத்துவதாக இம்முறை நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலினூடாக சாத்தியமாகும் என்ற நம்பிக்கை தனக்குள்ளது.

மேலும் சுமார் 30 வருடங்களாக என்னை நாடாளுமன்றம் அனுப்பிவரும் இம்மாவட்ட மக்கள் கடந்த தேர்தலிலும் என்னை வெற்றிபெறச் செய்தார்கள்.

இது ஈ.பிடி.பி கட்சிக்கு இதுவரை தமிழ் மக்கள் வழங்கிய அரசியல் அதிகாரங்களைக் கொண்டு முன்னெடுத்துவந்த சேவைகளுக்கு போதுமானதாக இருக்கவில்லை.

ஆனாலும் மக்கள் எமக்கு வழங்கிய அந்த சிறிய அதிகாரத்தை கொண்டு முடியுமானவரை பல்வேறு சேவைகளை  செய்து காட்டியிருக்கின்றோம்.

அத்துடன் எமது கட்சி மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்ற கொள்கையினூடான தேசிய நல்லிணக்கத்தை வலுப்படுத்தி அதனூடாக தனது பொறிமுறையை நகர்த்தி வெற்றி கண்டுள்ளது. 

இதேவேளை போலித் தேசியம் பேசி தமிழ் மக்களின் வாக்குகளை அபகரித்து அதிகாரங்களை பெற்றவர்கள் தத்தமது வாழ்வியலையும் சுகபோகங்களையும் மெருகூட்டிக்கொண்டார்களே தவிர  வாழும் மக்களுக்கு எதனையும் சாதித்துக் கொடுத்ததாக தெரியவில்லை. 

இதனால்  தமிழ் மக்களும் சுயலாப போலித் தேசிய அரசியலை தூக்கி எறிந்துவிட்டு ஜதார்த பூர்வமான அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த தயாராகிவிட்டனர்.

அதேநேரம் அரசியலில் குறிப்பாக சமூகத்தில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்துவதாக உறுதியளித்த தரப்பினரே இன்று எமது நாட்டின் ஆட்சிப்பீடத்தில் உள்ளனர்.

இதேநேரத்தில் மக்களுக்கும் நாட்டின் அரசியல் உள்ளிட்ட அனைத்து விடயங்களில் அக்கறை இருப்பது அவசியம். 

அதனால்தான் அரசியல் ரீதியாக செயற்படவும், சிந்திக்கவும் அதனூடாக போலிகளை அகற்றவும் மக்கள் முன்வர வேண்டும் என நான் பல காலமாக கூறிவருகின்றேன்.

அந்த மாற்றம் இப்போது தமிழ் மக்களிடையே ஏற்பட்டுள்ளதை பார்க்க முடிகின்றது. 

அதுமட்டுமல்லாது அந்த மாற்றத்தை அக்கறையும் ஆற்றலும் உள்ளவர்களது கரங்களுக்கு வழங்குவதற்கும் அவர்கள் விரும்புவதை அவதானிக்க முடிகின்றது.

குறிப்பாக உண்மையான மாற்றத்தைத் தேடும் சுறுசுறுப்பான நடவடிக்கை என்பதே தமிழ் அரசியல் பரப்பில் தற்போதைய அவசிய தேவையாக உள்ளது. அது இந்த தேர்தலில் மிக அவசியமாக உள்ளது.

இதேநேரம் மக்கள் விரும்பும் இந்த அக்கறை, ஆற்றல், சிறந்த வழிகாட்டல் ஆகியவற்றை கொண்டுள்ள சக்தியாக எமது ஈ.பி.டி.பி கட்சியே இன்று தமிழர் அரசியல் பரப்பில் இருக்கின்றது.

அதனால் எமது கட்சியின் கொள்கை வழிமுறையை ஏற்று அதனுடன் இணைந்து பயணிக்க தமிழ் மக்கள் அணிதிள வேண்டியது அவசியமாகும். 

அந்த அணிதிரள்வு இம்முறை நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் பிரதிபலிக்கும் என்ற நம்பிக்கை தனக்கு உள்ளதெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.


ஈ.பி.டி.பியின் கொள்கை வழிமுறையை ஏற்று தமிழ் மக்கள் அணிதிரள வேண்டும்- டக்ளஸ் வலியுறுத்து. ஈ.பி.டி.பி கட்சியின் கொள்கை வழிமுறையை ஏற்று அதனுடன் இணைந்து பயணிக்க தமிழ் மக்கள் அணிதிரள வேண்டும் என அக் கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ்  தேவானந்தா வேண்டுகோள் விடுத்துள்ளார்.வேலணை  பிரதேசத்தில் பல்வேறு பகுதிகளுக்கும் இன்றையதினம்(29) விஜயம் மேற்கொண்ட ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் ஈ.பி.டி.பியின் வீணை சின்னத்தை வலுப்படுத்தும் முகமாக பல்வேறு பிரசார கூட்டங்களில் பங்கெடுத்திருந்தார்.இதன்போது கருத்து தெரிவித்த டக்ளஸ் தேவானந்தா,மாற்றம் என்பது ஒவ்வொருவரிடமிருந்தும் நம்பிக்கையுடன்  உருவாக்கப்பட வேண்டும். அதுவே சமூக மாற்றத்திற்கும் தமிழ் மக்களின் அரசியல் மாற்றத்திற்கும் வழி வகுக்கும் .அந்த நம்பிக்கையுடன் கூடிய அரசியல் மாற்றம் ஈ.பிடி.பியை பலப்படுத்துவதாக இம்முறை நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலினூடாக சாத்தியமாகும் என்ற நம்பிக்கை தனக்குள்ளது.மேலும் சுமார் 30 வருடங்களாக என்னை நாடாளுமன்றம் அனுப்பிவரும் இம்மாவட்ட மக்கள் கடந்த தேர்தலிலும் என்னை வெற்றிபெறச் செய்தார்கள்.இது ஈ.பிடி.பி கட்சிக்கு இதுவரை தமிழ் மக்கள் வழங்கிய அரசியல் அதிகாரங்களைக் கொண்டு முன்னெடுத்துவந்த சேவைகளுக்கு போதுமானதாக இருக்கவில்லை.ஆனாலும் மக்கள் எமக்கு வழங்கிய அந்த சிறிய அதிகாரத்தை கொண்டு முடியுமானவரை பல்வேறு சேவைகளை  செய்து காட்டியிருக்கின்றோம்.அத்துடன் எமது கட்சி மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்ற கொள்கையினூடான தேசிய நல்லிணக்கத்தை வலுப்படுத்தி அதனூடாக தனது பொறிமுறையை நகர்த்தி வெற்றி கண்டுள்ளது. இதேவேளை போலித் தேசியம் பேசி தமிழ் மக்களின் வாக்குகளை அபகரித்து அதிகாரங்களை பெற்றவர்கள் தத்தமது வாழ்வியலையும் சுகபோகங்களையும் மெருகூட்டிக்கொண்டார்களே தவிர  வாழும் மக்களுக்கு எதனையும் சாதித்துக் கொடுத்ததாக தெரியவில்லை. இதனால்  தமிழ் மக்களும் சுயலாப போலித் தேசிய அரசியலை தூக்கி எறிந்துவிட்டு ஜதார்த பூர்வமான அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த தயாராகிவிட்டனர்.அதேநேரம் அரசியலில் குறிப்பாக சமூகத்தில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்துவதாக உறுதியளித்த தரப்பினரே இன்று எமது நாட்டின் ஆட்சிப்பீடத்தில் உள்ளனர்.இதேநேரத்தில் மக்களுக்கும் நாட்டின் அரசியல் உள்ளிட்ட அனைத்து விடயங்களில் அக்கறை இருப்பது அவசியம். அதனால்தான் அரசியல் ரீதியாக செயற்படவும், சிந்திக்கவும் அதனூடாக போலிகளை அகற்றவும் மக்கள் முன்வர வேண்டும் என நான் பல காலமாக கூறிவருகின்றேன்.அந்த மாற்றம் இப்போது தமிழ் மக்களிடையே ஏற்பட்டுள்ளதை பார்க்க முடிகின்றது. அதுமட்டுமல்லாது அந்த மாற்றத்தை அக்கறையும் ஆற்றலும் உள்ளவர்களது கரங்களுக்கு வழங்குவதற்கும் அவர்கள் விரும்புவதை அவதானிக்க முடிகின்றது.குறிப்பாக உண்மையான மாற்றத்தைத் தேடும் சுறுசுறுப்பான நடவடிக்கை என்பதே தமிழ் அரசியல் பரப்பில் தற்போதைய அவசிய தேவையாக உள்ளது. அது இந்த தேர்தலில் மிக அவசியமாக உள்ளது.இதேநேரம் மக்கள் விரும்பும் இந்த அக்கறை, ஆற்றல், சிறந்த வழிகாட்டல் ஆகியவற்றை கொண்டுள்ள சக்தியாக எமது ஈ.பி.டி.பி கட்சியே இன்று தமிழர் அரசியல் பரப்பில் இருக்கின்றது.அதனால் எமது கட்சியின் கொள்கை வழிமுறையை ஏற்று அதனுடன் இணைந்து பயணிக்க தமிழ் மக்கள் அணிதிள வேண்டியது அவசியமாகும். அந்த அணிதிரள்வு இம்முறை நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் பிரதிபலிக்கும் என்ற நம்பிக்கை தனக்கு உள்ளதெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement