• Nov 23 2024

மன்னார் பொது வைத்தியசாலையில் நிகழும் மரணங்கள்- நீதியான விசாரணைக்கு மஸ்தான் எம்.பி கோரிக்கை!

Tamil nila / Nov 21st 2024, 8:24 pm
image

மன்னார் பொது வைத்தியசாலையில் நேற்று முன்தினம் பிரசவத்தின் பொழுது  மரணித்த தாய் மற்றும் சிசு தொடர்பில் உரிய விசாரணையை நடாத்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை வழங்குவதுடன் மன்னார் வைத்தியசாலை தொடர்பில் அச்சமடைந்திருக்கும் மக்களின் அச்சத்தைப் போக்குமாறும் அவர் சம்பந்தபட்ட தரப்பினரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். 

இதேவேளை இவ்வாறான அசாதாரண சம்பவங்கள் தொடர்ந்தும் நடைபெறாமல் உரியவர்கள் நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதுடன் மக்களுக்கு உயரியதும் பாதுகாப்பானதுமான சேவை கிடைப்பதை உறுதிப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மன்னார் வைத்தியசாலையில் அண்மைக்காலமாக பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட தாய்மார் இறந்த சம்பவங்கள் பதிவாகியுள்ளமை கவலை அளிக்கிறது. 

நோயாளர்கள் தங்களது மருத்துவ தேவைகளுக்காக வைத்தியசாலைக்கு செல்வதற்கு அச்சமடைந்திருப்பதாகவும் அறிய முடிகிறது.

நடந்த சம்பவம் தொடர்பாக குழுக்கள் அமைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


மன்னார் பொது வைத்தியசாலையில் நிகழும் மரணங்கள்- நீதியான விசாரணைக்கு மஸ்தான் எம்.பி கோரிக்கை மன்னார் பொது வைத்தியசாலையில் நேற்று முன்தினம் பிரசவத்தின் பொழுது  மரணித்த தாய் மற்றும் சிசு தொடர்பில் உரிய விசாரணையை நடாத்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை வழங்குவதுடன் மன்னார் வைத்தியசாலை தொடர்பில் அச்சமடைந்திருக்கும் மக்களின் அச்சத்தைப் போக்குமாறும் அவர் சம்பந்தபட்ட தரப்பினரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இதேவேளை இவ்வாறான அசாதாரண சம்பவங்கள் தொடர்ந்தும் நடைபெறாமல் உரியவர்கள் நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதுடன் மக்களுக்கு உயரியதும் பாதுகாப்பானதுமான சேவை கிடைப்பதை உறுதிப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.மன்னார் வைத்தியசாலையில் அண்மைக்காலமாக பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட தாய்மார் இறந்த சம்பவங்கள் பதிவாகியுள்ளமை கவலை அளிக்கிறது. நோயாளர்கள் தங்களது மருத்துவ தேவைகளுக்காக வைத்தியசாலைக்கு செல்வதற்கு அச்சமடைந்திருப்பதாகவும் அறிய முடிகிறது.நடந்த சம்பவம் தொடர்பாக குழுக்கள் அமைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement