• Jul 27 2024

அடி காயங்களுடன் கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட ஆணின் சடலம்! ஒருவர் கைது - நடந்தது என்ன?

Chithra / May 28th 2024, 8:48 am
image

Advertisement


மட்டக்களப்பு மாவட்டம் வெல்லாவெளிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மண்டூர் பகுதியிலுள்ள வயல் வெளியில் அமைந்துள்ள கிணறு ஒன்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

நேற்று (27) காலை வெல்லாவெளி பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் படி சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்டவர் மண்டூர் கோட்டமுனை பகுதியைச் சேர்ந்த 69 வயதுடைய தம்பிராசா பதிராசா என்ற மீன் வியாபாரி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வருகை தந்த களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்ற நீதிபதி சடலம் மீட்கப்பட்டதும்,

அதை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்று பிரேத பரிசோதனைக்குட்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார்.

சடலத்தில் காயங்கள் காணப்படுவதாகவும், இது கொலையாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பெயரில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

கடந்த 26ஆம் திகதி அயல் வீட்டாருடன் ஏற்பட்ட தகராறு தொடர்பாக சமாதான சபைக்கு அனுப்பப்பட்ட முறைப்பாட்டில் பங்கேற்பதற்காக சென்று விட்டு, வீடு திரும்பிக் கொண்டிருந்த போது இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.  

மேலும் உயிரிழந்தவர் பயணித்த துவிச்சக்கரவண்டியும் அப்பகுதியில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டுள்ளதோடு, இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். 

அடி காயங்களுடன் கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட ஆணின் சடலம் ஒருவர் கைது - நடந்தது என்ன மட்டக்களப்பு மாவட்டம் வெல்லாவெளிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மண்டூர் பகுதியிலுள்ள வயல் வெளியில் அமைந்துள்ள கிணறு ஒன்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.நேற்று (27) காலை வெல்லாவெளி பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் படி சடலம் மீட்கப்பட்டுள்ளது.சடலமாக மீட்கப்பட்டவர் மண்டூர் கோட்டமுனை பகுதியைச் சேர்ந்த 69 வயதுடைய தம்பிராசா பதிராசா என்ற மீன் வியாபாரி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வருகை தந்த களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்ற நீதிபதி சடலம் மீட்கப்பட்டதும்,அதை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்று பிரேத பரிசோதனைக்குட்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார்.சடலத்தில் காயங்கள் காணப்படுவதாகவும், இது கொலையாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பெயரில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.கடந்த 26ஆம் திகதி அயல் வீட்டாருடன் ஏற்பட்ட தகராறு தொடர்பாக சமாதான சபைக்கு அனுப்பப்பட்ட முறைப்பாட்டில் பங்கேற்பதற்காக சென்று விட்டு, வீடு திரும்பிக் கொண்டிருந்த போது இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.  மேலும் உயிரிழந்தவர் பயணித்த துவிச்சக்கரவண்டியும் அப்பகுதியில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பில் அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டுள்ளதோடு, இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். 

Advertisement

Advertisement

Advertisement