• Apr 20 2026

மகாவலி ஆற்றங்கரையில் சிதைந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு!

Chithra / Mar 26th 2026, 10:41 am
image

கண்டி - கடுகஸ்தொட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வராதென்ன பகுதியில், மகாவலி ஆற்றங்கரையில் அடையாளந்தெரியாத நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.


நேற்று புதன்கிழமை (25) காலை மகாவலி ஆற்றங்கரையோரம் சடலம் ஒன்று காணப்படுவதாக கடுகஸ்தொட்டை பொலிஸாருக்குக் கிடைத்த தகவலையடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


சுமார் 35 முதல் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.


சடலம் அடையாளம் காணமுடியாத நிலையில் சிதைந்துள்ளதோடு, நிர்வாணமான நிலையிலேயே மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


சடலம் தற்போது கண்டி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. 

உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


சம்பவம் தொடர்பான  மேலதிக விசாரணைகளை கடுகஸ்தொட்டை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


மகாவலி ஆற்றங்கரையில் சிதைந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு கண்டி - கடுகஸ்தொட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வராதென்ன பகுதியில், மகாவலி ஆற்றங்கரையில் அடையாளந்தெரியாத நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.நேற்று புதன்கிழமை (25) காலை மகாவலி ஆற்றங்கரையோரம் சடலம் ஒன்று காணப்படுவதாக கடுகஸ்தொட்டை பொலிஸாருக்குக் கிடைத்த தகவலையடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.சுமார் 35 முதல் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.சடலம் அடையாளம் காணமுடியாத நிலையில் சிதைந்துள்ளதோடு, நிர்வாணமான நிலையிலேயே மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சடலம் தற்போது கண்டி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சம்பவம் தொடர்பான  மேலதிக விசாரணைகளை கடுகஸ்தொட்டை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement