• Jan 13 2025

டயர் விலையை குறைக்க உற்பத்தியாளர்கள் இணக்கம்

Chithra / Jan 1st 2025, 2:54 pm
image


உள்நாட்டு டயர் ஒன்றின் விலையை கணிசமான அளவில் குறைப்பதற்கு உள்ளூர் டயர் உற்பத்தியாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு டயர் உற்பத்தியாளர்கள் சங்கத்துடன் வர்த்தக அமைச்சில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர்கள் இந்த இணக்கத்தை வெளிப்படுத்தியதாக அமைச்சர் தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.

நாட்டில் உற்பத்தி செய்யப்படும் டயர்கள் உள்ள நிலையில் டயர்களை இறக்குமதி செய்வதன் மூலம் நாடு பாரியளவில் அந்நியச் செலாவணியை இழந்துள்ளதாக டயர் உற்பத்தியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இவ்வாறு இறக்குமதி செய்வதால் தேவைக்கு அதிகமான டயர்கள் இருப்பதால் எதிர்காலத்தில் இறக்குமதி செய்யப்படும் டயர்களுக்கு கட்டுப்பாடுகளை விதிக்குமாறு உள்நாட்டு டயர் உற்பத்தியாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்ததாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.

டயர் விலையை குறைக்க உற்பத்தியாளர்கள் இணக்கம் உள்நாட்டு டயர் ஒன்றின் விலையை கணிசமான அளவில் குறைப்பதற்கு உள்ளூர் டயர் உற்பத்தியாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.உள்நாட்டு டயர் உற்பத்தியாளர்கள் சங்கத்துடன் வர்த்தக அமைச்சில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர்கள் இந்த இணக்கத்தை வெளிப்படுத்தியதாக அமைச்சர் தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.நாட்டில் உற்பத்தி செய்யப்படும் டயர்கள் உள்ள நிலையில் டயர்களை இறக்குமதி செய்வதன் மூலம் நாடு பாரியளவில் அந்நியச் செலாவணியை இழந்துள்ளதாக டயர் உற்பத்தியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.இவ்வாறு இறக்குமதி செய்வதால் தேவைக்கு அதிகமான டயர்கள் இருப்பதால் எதிர்காலத்தில் இறக்குமதி செய்யப்படும் டயர்களுக்கு கட்டுப்பாடுகளை விதிக்குமாறு உள்நாட்டு டயர் உற்பத்தியாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்ததாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement