முட்டையொன்றின் ஊடாக உற்பத்தியாளர்கள் 25 ரூபாய் என்ற நியாயமற்ற இலாபத்தை பெறுவதாக அகில இலங்கை முட்டை வர்த்தகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
தற்போது முட்டை ஒன்றை உற்பத்தி செய்வதற்கான செலவு சுமார் 20 ரூபாய் என, சங்கத்தின் தலைவர் அனுர மாரசிங்க குறிப்பிட்டுள்ளார்.
பண்ணைகளில் முட்டையின் மொத்த விலை 45 ரூபாய் தொடக்கம் 50 ரூபாய் வரையில் காணப்படுவதாக அவர் கூறியுள்ளார்.
இவ்வாறான அதிக விலைக்கு வியாபாரிகள் கொள்வனவு செய்ய வேண்டிய நிலை காரணமாகவே சந்தையில் முட்டை ஒன்றின் விலை தற்போது 50 ரூபாயைத் தாண்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
முட்டை விலையில் நியாயமற்ற இலாபத்தை பெறும் உற்பத்தியாளர்கள் - வர்த்தகர்கள் குற்றச்சாட்டு முட்டையொன்றின் ஊடாக உற்பத்தியாளர்கள் 25 ரூபாய் என்ற நியாயமற்ற இலாபத்தை பெறுவதாக அகில இலங்கை முட்டை வர்த்தகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.தற்போது முட்டை ஒன்றை உற்பத்தி செய்வதற்கான செலவு சுமார் 20 ரூபாய் என, சங்கத்தின் தலைவர் அனுர மாரசிங்க குறிப்பிட்டுள்ளார்.பண்ணைகளில் முட்டையின் மொத்த விலை 45 ரூபாய் தொடக்கம் 50 ரூபாய் வரையில் காணப்படுவதாக அவர் கூறியுள்ளார்.இவ்வாறான அதிக விலைக்கு வியாபாரிகள் கொள்வனவு செய்ய வேண்டிய நிலை காரணமாகவே சந்தையில் முட்டை ஒன்றின் விலை தற்போது 50 ரூபாயைத் தாண்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.