2025ஆம் ஆண்டாகும் போது நாட்டின் மொத்த வரி வருமானத்தின் 40 சதவீதத்தை வருமான வரி, செல்வ மற்றும் ஆதன வரிகள் மூலம் ஈட்டிக்கொள்ள அரசாங்கம் இலக்கு வைத்துள்ளது.
தற்போது இதன் அளவு மொத்த வரியில் 30 சதவீதமாக உள்ளது.
வரி அறவீட்டு வலையை விரிவாக்குதல் மற்றும் வரி ஏய்ப்பாளர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளின் ஊடாக இதனைச் சாத்தியப்படுத்திக் கொள்ள எதிர்பார்ப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
அதிக வருமானம் ஈட்டுகின்ற மற்றும் சொத்து பொறுப்பு உடைமையாளர்களுள் வரிசெலுத்தும் இயலுமை அதிகமுள்ளவர்களிடம் நேரடி வரிகளை அறவிட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் மொத்த உள்நாட்டு உற்பத்தி 15 சதவீதத்தை எட்டியப் பின்னர் மக்களுக்கு வரிச்சலுகைகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
வரிச்சலுகைகளை வழங்கக்கூடிய காலத்தைத் துல்லியமாக கூற முடியாது.
ஆனால், அரசாங்கத்தின் தற்போதைய வேலைத்திட்டத்தின் கீழ் இலக்கை விரைவாக எட்ட முடியும் என்றும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையில் அதிகரிக்கப்படும் மொத்த வரி வருமானம் - அரசின் அடுத்த இலக்கு 2025ஆம் ஆண்டாகும் போது நாட்டின் மொத்த வரி வருமானத்தின் 40 சதவீதத்தை வருமான வரி, செல்வ மற்றும் ஆதன வரிகள் மூலம் ஈட்டிக்கொள்ள அரசாங்கம் இலக்கு வைத்துள்ளது. தற்போது இதன் அளவு மொத்த வரியில் 30 சதவீதமாக உள்ளது. வரி அறவீட்டு வலையை விரிவாக்குதல் மற்றும் வரி ஏய்ப்பாளர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளின் ஊடாக இதனைச் சாத்தியப்படுத்திக் கொள்ள எதிர்பார்ப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். அதிக வருமானம் ஈட்டுகின்ற மற்றும் சொத்து பொறுப்பு உடைமையாளர்களுள் வரிசெலுத்தும் இயலுமை அதிகமுள்ளவர்களிடம் நேரடி வரிகளை அறவிட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.மேலும் மொத்த உள்நாட்டு உற்பத்தி 15 சதவீதத்தை எட்டியப் பின்னர் மக்களுக்கு வரிச்சலுகைகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.வரிச்சலுகைகளை வழங்கக்கூடிய காலத்தைத் துல்லியமாக கூற முடியாது.ஆனால், அரசாங்கத்தின் தற்போதைய வேலைத்திட்டத்தின் கீழ் இலக்கை விரைவாக எட்ட முடியும் என்றும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய சுட்டிக்காட்டியுள்ளார்.