• Nov 13 2024

ஸ்பெயினில் பலர் மாயம் – தண்ணீர், உணவு, மின்சாரம் இல்லாமல் தவிக்கும் மக்கள்!

Tamil nila / Nov 2nd 2024, 8:34 am
image

ஸ்பெயின் (Spain) சந்தித்துள்ள மிக மோசமான வெள்ளப் பேரிடரில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 200ஐத் தாண்டிவிட்டதென தெரிவிக்கப்படுகின்றது.

மரண எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. பலர் காணாமல் போயுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அவர்களைத் தேடிக் கண்டுபிடிக்கும் நம்பிக்கை குறைந்துவருகிறது. இருப்பினும் மீட்புப் பணியாளர்கள் தொடர்ந்து முயற்சி மேற்கொள்கின்றனர்.

வெலன்சியா (Valencia) வட்டாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. பலியானோரில் அதிகமானோர் அங்கிருந்தவர்கள். பெருவெள்ளத்தால் பாலங்கள் சேதமடைந்தன.

நகரங்கள் சேறும் சகதியுமாகக் காட்சியளிக்கின்றன. தண்ணீர், உணவு, மின்சாரம் இல்லாமல் மக்கள் தவிக்கின்றனர்.

வெள்ள அபாயம் குறித்து அதிகாரிகள் முன்கூட்டியே எச்சரித்திருந்தால் ஏராளமானோரைக் காப்பாற்றியிருக்கலாம் என்று குடியிருப்பாளர்கள் சிலர் கூறுகின்றனர்.

ஸ்பெயினில் பலர் மாயம் – தண்ணீர், உணவு, மின்சாரம் இல்லாமல் தவிக்கும் மக்கள் ஸ்பெயின் (Spain) சந்தித்துள்ள மிக மோசமான வெள்ளப் பேரிடரில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 200ஐத் தாண்டிவிட்டதென தெரிவிக்கப்படுகின்றது.மரண எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. பலர் காணாமல் போயுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.அவர்களைத் தேடிக் கண்டுபிடிக்கும் நம்பிக்கை குறைந்துவருகிறது. இருப்பினும் மீட்புப் பணியாளர்கள் தொடர்ந்து முயற்சி மேற்கொள்கின்றனர்.வெலன்சியா (Valencia) வட்டாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. பலியானோரில் அதிகமானோர் அங்கிருந்தவர்கள். பெருவெள்ளத்தால் பாலங்கள் சேதமடைந்தன.நகரங்கள் சேறும் சகதியுமாகக் காட்சியளிக்கின்றன. தண்ணீர், உணவு, மின்சாரம் இல்லாமல் மக்கள் தவிக்கின்றனர்.வெள்ள அபாயம் குறித்து அதிகாரிகள் முன்கூட்டியே எச்சரித்திருந்தால் ஏராளமானோரைக் காப்பாற்றியிருக்கலாம் என்று குடியிருப்பாளர்கள் சிலர் கூறுகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement