கரையோர மார்க்கத்தின் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (23) மற்றும் நாளை (24) பல ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
தொடந்துவ மற்றும் பூஸா இடையேயான கடலோர கரையோர மார்க்கத்தின் பல ரயில் சேவைகள் இவ்வாறு இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் ரவீந்திர பத்மபிரியா அறிவித்துள்ளார்.
அதன்படி, காலி ரயில் நிலையத்திலிருந்து காலை 05.15 மணிக்கு கொழும்பு கோட்டைக்கு புறப்பட திட்டமிடப்பட்ட ரயில் எண் 8319 மற்றும் மருதானை ரயில் நிலையத்திலிருந்து நண்பகல் 12.10 மணிக்கு காலிக்கு புறப்பட திட்டமிடப்பட்ட ரயில் எண் 8788 ஆகிய ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
காலி ரயில் நிலையத்திலிருந்து அதிகாலை 05.00 மணிக்கு கொழும்பு கோட்டைக்கு புறப்பட திட்டமிடப்பட்ட ரயில் எண் 8327 சமுத்திரதேவி காலி ரயில் நிலையத்திலிருந்து சுமார் 1 மணி நேரம் தாமதமாக காலை 06.30 மணிக்கு பயணத்தைத் தொடங்கும்.
காலி ரயில் நிலையத்திலிருந்து அதிகாலை 04.10 மணிக்கு கொழும்பு கோட்டை நோக்கி புறப்படும் ரயில் எண் 8320, காலை 08.50 மணிக்கு காலி ரயில் நிலையத்திலிருந்து பயணத்தைத் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பல ரயில் சேவைகள் ரத்து - பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு கரையோர மார்க்கத்தின் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (23) மற்றும் நாளை (24) பல ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தொடந்துவ மற்றும் பூஸா இடையேயான கடலோர கரையோர மார்க்கத்தின் பல ரயில் சேவைகள் இவ்வாறு இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் ரவீந்திர பத்மபிரியா அறிவித்துள்ளார். அதன்படி, காலி ரயில் நிலையத்திலிருந்து காலை 05.15 மணிக்கு கொழும்பு கோட்டைக்கு புறப்பட திட்டமிடப்பட்ட ரயில் எண் 8319 மற்றும் மருதானை ரயில் நிலையத்திலிருந்து நண்பகல் 12.10 மணிக்கு காலிக்கு புறப்பட திட்டமிடப்பட்ட ரயில் எண் 8788 ஆகிய ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.காலி ரயில் நிலையத்திலிருந்து அதிகாலை 05.00 மணிக்கு கொழும்பு கோட்டைக்கு புறப்பட திட்டமிடப்பட்ட ரயில் எண் 8327 சமுத்திரதேவி காலி ரயில் நிலையத்திலிருந்து சுமார் 1 மணி நேரம் தாமதமாக காலை 06.30 மணிக்கு பயணத்தைத் தொடங்கும். காலி ரயில் நிலையத்திலிருந்து அதிகாலை 04.10 மணிக்கு கொழும்பு கோட்டை நோக்கி புறப்படும் ரயில் எண் 8320, காலை 08.50 மணிக்கு காலி ரயில் நிலையத்திலிருந்து பயணத்தைத் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.