யாழில் சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர் ஒருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
யாழ் வடமராட்சி கிழக்கு கடற்பகுதியில் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் கடற்படையினர் தொடர் சுற்றிவளைப்புக்களை மேற்கொண்டு வருகின்றனர்.
இதன் விரிவாக்கமாக வெற்றிலைக்கேணி கடற்படையினர் நேற்றையதினம்(11) காலை கட்டைக்காடு கடற்பகுதியில் தேடுதல் நடத்திய போது ஒளி பாய்ச்சி மீன்பிடித்த குற்றச்சாட்டில் மீனவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட மீனவர் கட்டைக்காடு பகுதியை சேர்ந்தவர் என்பதோடு, மேலதிக சட்ட நடவடிக்கைக்காக உடமைகளுடன் , மீனவர் தாளையடி நீரியல்வள திணைக்கள அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
வடமராட்சி கடற்பகுதியில் கடற்படையினர் திடீர் சுற்றிவளைப்பு. ஒருவர் கைது. யாழில் சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர் ஒருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,யாழ் வடமராட்சி கிழக்கு கடற்பகுதியில் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் கடற்படையினர் தொடர் சுற்றிவளைப்புக்களை மேற்கொண்டு வருகின்றனர்.இதன் விரிவாக்கமாக வெற்றிலைக்கேணி கடற்படையினர் நேற்றையதினம்(11) காலை கட்டைக்காடு கடற்பகுதியில் தேடுதல் நடத்திய போது ஒளி பாய்ச்சி மீன்பிடித்த குற்றச்சாட்டில் மீனவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்ட மீனவர் கட்டைக்காடு பகுதியை சேர்ந்தவர் என்பதோடு, மேலதிக சட்ட நடவடிக்கைக்காக உடமைகளுடன் , மீனவர் தாளையடி நீரியல்வள திணைக்கள அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.